BHEL நிறுவனத்தில் 75 டிரெய்னி இன்ஜினியர் பணி.. பிப்.9க்குள் விண்ணப்பிக்கவும்
பெல் நிறுவனப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியுள்ள நபர்கள் மட்டும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தில் இந்தியாவில் 75 டிரெய்னி இன்ஜினியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமுள்ள பொறியியல் பட்டதாரிகள் வருகின்ற பிப்ரவரி 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மகாரத்னா மதிப்பைப் பெற்ற மிகப்பெரிய நிறுவனம் தான் பாரத மிகு மின் நிறுவனம் எனப்படும் பெல் நிறுவனம். இந்தியாவில் போபால், அரித்வார், ஐதராபாத், திருச்சிராப்பள்ளி, இராணிப்பேட்டை ஆகிய 15 க்கும் மேற்பட்ட இடங்களில் நிறுவனத்தின் உற்பத்திப்பிரிவுகள் செயல்பட்டுவருகின்றன. இங்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில் அவ்வப்போது தொழில் பழகுநர் பணிக்கான அறிவிப்பு வெளியாகும். அதன் ஒரு பகுதியாக தற்போது தற்காலிக அடிப்படையில் பயிற்சி பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதி? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்.
பெல் நிறுவனத்தில் பயிற்சி பொறியாளர் (Trainee Engineer) பணிக்கானத் தகுதிகள்:
மொத்த காலிப்பணியிடங்கள்: 75
கல்வித்தகுதி: பெல் நிறுவனத்தில் பயிற்சி பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE/B.Tech ( Computer science, Information Information Technology/Information Science/Computer Science & Engineering/ Electronics/Electronics & Communication/Mechanical/Electrical) படித்து முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 01.02.2022 அன்று 28 வயதிற்குள் இருக்க வேண்டும். இதோடு மத்திய அரசின் விதிகளின் படி எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் என தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdem5WtyDL3tcrR-4IsOluTl7UcUcoZMEEnG6w30IDH7FtSKQ/viewform என்ற இணையதளப்பக்கத்தில் முதலில் ரிஜிஸ்டர் செய்துக்கொள்ள வேண்டும். அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் சரியாக பூர்த்தி செய்து விண்ணப்பத்தை வருகின்ற பிப்ரவரி 9 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியுள்ள நபர்கள் மட்டும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
சம்பளம்:
நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு முதலாம் ஆண்டு ரூபாய் 30ஆயிரம், இரண்டாம் ஆண்டு ரூபாய் 35 ஆயிரம், மூன்றாம் ஆண்டு ரூபாய் 40 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே ஆர்வமுள்ள பொறியியல் பட்டதாரிகள் பெல் நிறுவனத்தின் டிரெய்னி இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறுங்கள். மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://bel-india.in/Documentviews.aspx?fileName=Web%20Ad%20for%20Walk%20In%20for%20Software-1-02-2022.pdf என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.