மேலும் அறிய

Yoga Tips: யோகா செய்யும்போது காயம் ஏற்படுகிறதா..? எப்படி தவிர்ப்பது..?

கோவிட் தொற்றுநோய், சுவாசப் பிரச்சினைகள், சோர்வு மற்றும் இதயப் பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகளில் இருந்து தப்பிப்பதற்கு யோகா முக்கியப் பங்கு வகிக்கிறது.

யோகா சமீபத்திய காலங்களில் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமடைந்து வருகிறது, ஏனெனில் இது மனம் மற்றும் உடல் இரண்டுக்கும்  நன்மைகளை வழங்குகிறது.அதன் நன்மைகளைக் கருத்தில் கொண்டு பண்டைய நடைமுறையை இன்னும் பொருத்தமானதாக ஆக்கியுள்ளது. பலருக்கு இது வாழ்க்கையையே மாற்றிக் கொடுத்துள்ளது.

ஆனால் சரியாகச் செய்யத் தெரியாத நிலையில் மக்களுக்கு  இது மூட்டு, தசை மற்றும் தசைநாண்கள் ஆகியவற்றில் காயங்களை ஏற்படுத்துகிறது. எந்தத் தோரணையில் யோகா செய்கிறோம், எந்த வேகத்தில் செய்கிறோம் என அத்தனையும் இதற்கு முக்கியம். மிகவும் தீவிரமான ஆசனங்களுக்குச் செல்வதற்கு முன் உங்கள் தசைகள் மற்றும் மூட்டுகளைத் தயார்படுத்தும் ஸ்ட்ரெச்கள் உள்ளன. சில சமயங்களில், யோகாவை வெறும் உடற்பயிற்சியாக மட்டுமே மக்கள் கருதுகின்றனர், உண்மையில் அது உணவு, பிராணயாமம், தியானம் போன்ற பல அம்சங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான வாழ்க்கை முறை.


Yoga Tips: யோகா செய்யும்போது காயம் ஏற்படுகிறதா..? எப்படி தவிர்ப்பது..?


யோகாவால் ஏற்படும் காயங்களைத் தடுக்க யோகா பயிற்சியாளர்களுக்கான சில குறிப்புகள் இங்கே பரிந்துரைக்கப்படுகின்றன..

1. மனம் உடல் இணைப்பை வளர்த்துக் கொள்ளுங்கள்

வழக்கமான யோகா பயிற்சி உங்கள் உடல் மற்றும் சுவாசத்துடன் ஒரு இணைப்பை உருவாக்க உதவுகிறது. பல்வேறு தோரணைகளால் குறிப்பிட்ட தசைப்பகுதிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள இது உதவுகிறது. நீங்கள் இதனை உணர்ந்துகொண்டால் காயங்களைத் தவிர்க்கலாம். யோகா சகிப்புத்தன்மையை அதிகரிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது, இது தசை சோர்வு மற்றும் சமநிலையை குறைக்கிறது. யோகாவின் முதன்மை நோக்கம் மனம்-உடல் தொடர்பை வளர்ப்பதாகும், மேலும் காயங்களைத் தடுப்பதில் இந்த இணைப்பு முக்கியமானது.

2. சுவாசத்தை கவனித்துக் கொள்ளுங்கள்

பயிற்சி செய்வதற்கு முன் ஒவ்வொரு நிலைக்கும் சரியான தோரணையை அறிந்து கொள்ளுங்கள். இது காயங்களைத் தடுக்க உதவுகிறது மற்றும் இதன்மூலம் உங்கள் பயிற்சியிலிருந்து நீங்கள் அதிகப் பயனடையலாம் என்பதை உறுதி செய்கிறது. உங்களுக்கு ஏற்கனவே காயம் இருந்தால் கவனமாக இருங்கள் மற்றும் சில போஸ்களைத் தவிர்க்கவும். 

3. மெதுவாக தொடங்கவும்

யோகா பயிற்சியின் போது ஒருபோதும் மந்தமான தருணம் இருக்காது. ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பையும் புத்தம் புதிய தொடக்கத்தையும் வழங்குகிறது. நீங்கள் பொதுவாகக் கற்பதற்கு ஆர்வமாக இருக்க வேண்டும், ஆனால் நீங்கள் அதை உணரும் வரை கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். இதற்கு முன்பு நீங்கள் உடற்பயிற்சி செய்யவில்லை அல்லது எந்த உடல் செயல்பாடுகளிலும் பங்கேற்கவில்லை என்றால், யோகா சில வகையில் அச்சுறுத்தலாக இருக்கலாம். மெதுவாக தொடங்குவதன் மூலம் உங்கள் பேஸ் பகுதிகளில் வலுவை வளர்த்துக் கொள்ளலாம்.

4. காயங்களைத் தடுக்கக்கூடிய ஆசனங்கள்

தண்டாசனம், மல்சனா மற்றும் சந்தோலாஞ்சனா ஆகிய மூன்று ஆசனங்கள் உடலை மேலும் நிலையானதாக மாற்ற உதவும். உங்கள் காயத்தின் வகையைப் பொறுத்து குறிப்பிட்ட ஆசனங்களைச் செய்யலாம். சமஸ்திதி, விருக்ஷாசனம் மற்றும் ஏகபாதாசனம் ஆகியவை உங்கள் முதுகைப் பாதுகாக்கவும் காயங்களை தடுக்கவும் உதவும். காயங்களைத் தவிர்ப்பதற்கும், சிகிச்சையளிப்பதற்கும் யோகா பயிற்சி செய்ய வேண்டும். 

5. எச்சரிக்கையுடன் தொடரவும்

நீங்கள் மெதுவாக பயிற்சி செய்யாவிட்டால், நாட்பட்ட நிலையில் உங்களுக்குத் தீங்கு ஏற்படும் அபாயம் உள்ளது. உடல் தோரணைகள், பிராணயாமா அல்லது தியானம் போன்ற யோகா டெக்னிக்குகளைப் பயன்படுத்தும் போது, மெதுவாக அதனைச் செய்வதே உங்கள் இலக்குகளை அடைய சிறந்த வழியாகும். 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Metro Time Table for Pongal; பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை;  இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை; இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
Embed widget