Tips to sleep well: தூக்கம் முக்கியம் பாஸ்! தூக்கம் வர்லயா உங்களுக்கு.? நல்லா தூங்க நச்சுன்னு 4 டிப்ஸ்..!
இன்சோம்னியா க்ரோனிக் ( நாள்பட்ட தூக்கமின்மை) அவதிப்படுபவரா நீங்கள் அப்படியானால் இந்தக்கட்டுரை உங்களுக்குத்தான்
இன்சோம்னியா க்ரோனிக் ( நாள்பட்ட தூக்கமின்மை) அவதிப்படுபவரா நீங்கள் அப்படியானால் இந்தக்கட்டுரை உங்களுக்குத்தான்
பரபரவென ஓடிக்கொண்டிருக்கும் இந்த அவசரகதியான வாழ்கையில், அதே வேகத்தில் பல நோய்களும் நம்மை வந்து ஒட்டிக்கொள்கின்றன. அதற்கு காரணங்களாக முறையற்ற சாப்பாடு, உடற்பயிற்சியின்மை என பல விஷயங்கள் சொல்லப்பட்டாலும், முக்கிய காரணியாக பார்க்கப்படுவது தூக்கமின்மை.
இந்தப்பிரச்னைக்கு மனஅழுத்தம், கவலை, சொந்த வாழ்கை மற்றும் தொழில் வாழ்கை தொடர்பான வேலைகளால் 24 மணி நேரமும் சிந்தித்துக்கொண்டே இருப்பது உள்ளிட்டவை காரணங்களாக சொல்லப்படுகின்றன.
இன்சோம்னியா என்ற அழைக்கப்படும் இந்தப்பிரச்னை தொடர்ந்து இருக்கும் போது அது க்ரானிக் எனப்படும் நாள்பட்ட தூக்கமின்மை பிரச்னையாக மாறுகிறது. இந்த நிலையில் இந்த பிரச்சனையில் வெளிவரும் உதவும் சில வழிமுறைகளை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.
உடற்பயிற்சி:
உடற்பயிற்சி செய்வதும், ஆரோக்கியமாக இருப்பது நிச்சயம் நம்மை பல உடல்நல பிரச்னைகளில் இருந்து காக்கும். ஆனால் அப்படி செய்யும் உடற்பயிற்சி தூங்குவதற்கு 2, 3 மணிக்கு முன்னதாக இருக்கும் படி பார்த்துக்கொள்வது முக்கியம். காரணம் தூங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு உடற்பயிற்சி செய்யும் போது, அது நமக்கு அதிக எனர்ஜியை தந்துவிடும். அந்த எனர்ஜியால் நமது தூக்கம் பாதிக்கப்படும்.
இருட்டான அறை
இருட்டான அறையில் தூங்குவது சீரான தூக்கத்திற்கு வழிவகுக்கும். அதற்கு உதவும் விதமாக வெளிச்சம் நமக்கு படுக்கையறைக்குள் நுழையாமல் இருக்க, தடிமனான திரைச்சீலைகளை பயன்படுத்தலாம். இன்சோம்னியா பிரச்னை உள்ளவர்கள் ஃபேஸ் மாஸ்க் அணிந்து தூங்கலாம். அதே போல இரவில் டிவி மற்றும் செல்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். காரணம் எலக்ட்ரானிக் கேஜெட்டுகள் நமது மூளையை தூண்டி நமது தூக்கத்தை பாதித்து விடும்.
அமைதியான மனநிலை
பரபரவென ஓடிக்கொண்டிருக்கும் இந்த வாழ்கையில் நமது மனதை அமைதியாக வைத்துக்கொள்ள தியானத்தை தாண்டி பாடல்கள் கேட்பது, புத்தகம் வாசிப்பது உள்ளிட்ட பல வழிகள் நமது மனதை அமைதியாக்க உதவுகின்றன. காரணம் இவை நமது நரம்புகளை அமைதிப்படுத்துகின்றன. அதே போல தூக்கம் வரவில்லையே என்று அதிகப்படியாக கவலைப்படுவதும் நமது தூக்கத்தை பெரிதும் பாதிக்கிறதாம்.
கெட்டபழக்கவழக்கங்கள்
காபி, டீ, சிகரெட் போன்றவை தூக்கத்தின் மிகப் பெரிய எதிரிகள். நீங்கள் இன்சோம்னியா பிரச்னையால் அவதிப்படுபவரானால் மேற்சொன்ன பழக்கங்களை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )