Kashi Lalima : இது தெரியுமா? இதய ஆரோக்கியத்துக்கு இவ்வளவு நல்லதா? சிவப்பு வெண்டைக்காய் ஒரு மேஜிக்..
சிவப்பு வெண்டைக்காயில் , 21 சதவிகிதம் இரும்புச்சத்து மற்றும் 5 சதவிகிதம் புரதம் இருப்பது ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.
பொதுவாகவே வெண்டைக்காய் எல்லோராலும் விரும்பி உணவில் சேர்க்கப்படும் ஒரு காய்கறி வகையாகும். இதில் பச்சை வெண்டைக்காய் சிவப்பு வெண்டைக்காய் என இது வகைகள் உள்ளன. கிட்டத்தட்ட இவை இரண்டுமே ஒரே வகையான சத்துக்களைத் தான் கொடுக்கின்றன.
வெண்டைக்காய்கள் பொதுவாக மனிதர்களுடைய உடலில் நோய்களை குணப்படுத்தும் ஒரு மருந்தாகவும் காணப்படுகிறது. பொதுவாகவே இயற்கையாக விளைந்த காய்கறிகள் விளைந்த காய்கறிகள் மனித உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கின்றன. காய்கறிகளின் நிறங்கள் மற்றும் அதன் நற்குணங்கள் மனதுக்கு மென்மையான அதிர்வுகளையும் ஊட்டச்சத்துக்கள் போன்றவற்றையும் கலவையாக வழங்குகின்றன. இருந்த போதிலும் காய்கறிகளின் நிறங்கள் ஒவ்வொரு வகைக்கு ஏற்றவாறு வேறுபட்டு தான் காணப்படும். தற்போதைய நவீன காலத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஏராளமான காய்கறிகள் சந்தைகளில் வரத் தொடங்கியுள்ளன. இருந்த போதிலும், இன்னும் சில காய்கறிகள் அவற்றின் வழக்கமான நிறங்களுடன் இயற்கையாகவே கலர் வேறுபாட்டுடன் இருக்கின்றன. அத்தகைய ஒரு காய் தான் லேடீஸ்பிங்கர் என்று அழைக்கப்படும் வெண்டைக்காய்.
நமது வீடுகளில் முக்கிய உணவாக பயன்படுத்தப்படும் வெண்டைக்காய், பெரும்பாலும் பச்சை நிறத்தில் தான் இருக்கும். ஆனால், தற்போது சிவப்பு நிற புதிய வகை வெண்டைக்காய் விளைவிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. காஷி லலிமா என்று இந்திய வேளாண் வல்லுநர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அழைக்கப்படும் இந்த சிவப்பு வெண்டைக்காய், முற்றிலும் கண்ணை கவரும் விதமாக பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமம் பொட்டு கலர் போல் பிரகாசமாய் இருக்கிறது.
இந்த காஷி லலிமா எனப்படும் சிவப்பு வெண்டைக்காய் எப்படி உருவானது?
இந்த சிவப்பு நிற வெண்டைக்காய் குறித்த இந்திய கண்டுபிடிப்பு வெற்றி அடைய 23 வருடங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு அறியப்பட்டது என கூறப்படுகிறது. சிவப்பு நிற வெண்டைக்காயை உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனம் தான் பல வருட ஆராய்ச்சிக்குப் பின் உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
வெண்டைக்காய் பல்வேறு நன்மை தரும் பண்புகளை கொண்டுள்ளது. இந்த சிவப்பு வெண்டைக்காய் இயற்கையான மலமிளக்கியாகவும், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் திறன் கொண்டதாகும் . அதேபோல் ஆக்ஸிஜனேற்றப் பண்புகள் மற்றும் போலிக் அமிலம் போன்றவை கர்ப்பிணிப் பெண்களுக்கு பலவித நன்மைகளை புரிவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த இந்திய விவசாய கண்டுபிடிப்பான வெண்டைக்காயானது ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருப்பதோடு மட்டுமின்றி, மலிவு விலையிலும் கிடைக்கிறது. சிவப்பு வெண்டைக்காயில் இருக்கும் இரும்புச் சத்து, கால்சியம் சத்துகள், இதய ஆரோக்கியத்திற்கு உகந்ததாகும், உடலில் படியும் கெட்ட கொழுப்பை தடுக்கவும் சிவப்பு வெண்டைக்காய் உதவுகிறது.
இந்த வெண்டைக்காயில் உள்ள ஆக்சிஜனேற்றங்கள், இதய பிரச்சனைகளைத் தடுத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
அதேபோல் உடலில் சர்க்கரை அளவை சமமாக வைத்திருக்கவும் இந்த வெண்டைக்காய் உதவுகிறது. சிவப்பு நிற வெண்டைக்காயை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் குறைகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு பல நோய்கள் வராமல் கட்டுக்குள் இருக்க இந்த வெண்டைக்காய் மிகவும் உதவுகிறது.
உடலில் கொழுப்புச்சத்து அதிகமாக உள்ளவர்கள் எலும்பு மூட்டுகளில் தேய்மானம் உள்ளவர்கள் இந்த சிவப்பு வெண்டைக்காயை தங்களது உணவில் அன்றாடம் சேர்த்துக் கொள்வதால் உடலின் நிலைத்தன்மையை பேண முடியும். சிவப்பு வெண்டைக்காயில் உள்ள அதிகளவு நார்ச் சத்து, மலச்சிக்கலை தீர்ப்பதோடு, குடல் புண்ணையும் ஆற்றுகிறது. அதோடு, உணவு செரிமானம் அடையவும் ,வயிற்றுப் பொருமல், தசைப் பிடிப்பு மற்றும் குடலியக்க பிரச்சனைகளை சரி செய்யவும் சிவப்பு வெண்டைக்காய் உதவுகிறது. இந்த சிவப்பு வெண்டைக்காய் இதய நோய்களை குணப்படுத்துவதோடு நோய் தொற்றில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது. குங்குமம் பிந்தி என அழைக்கப்படும் இந்த சிவப்பு வெண்டைக்காயில் 94 சதவீதம் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது, இது இயற்கையாகவே உடலில் எல்டிஎல் அளவைக் குறைக்க உதவுகிறது.
இந்த சிவப்பு வெண்டைக்காயில் , 21 சதவிகிதம் இரும்புச்சத்து மற்றும் 5 சதவிகிதம் புரதம் இருப்பது ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் வெஜிடபிள் ரிசர்ச் மூலம் உருவாக்கப்பட்டது, இந்த சிவப்பு நிற வெண்டைக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆந்தோசயினின்கள் மற்றும் பீனாலிக்ஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை சிறந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.
வைட்டமின்கள் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ், அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரியை கொண்டுள்ளதால் இது ஆரோக்கிய ஆர்வலர்களின் உலகில் அடுத்த பெரிய சூப்பர்ஃபுட் ஆக்குகிறது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )