எடைகுறைப்பு முதல் நீரிழிவு தடுப்பு வரை: வாழ்நாள் ஆயுளை நீடிக்கும் வால்நட் பருப்புகள்!
உங்கள் தினசரி உணவில் சிறிதளவு அக்ரூட் பருப்புகளைச் சேர்ப்பதன் மூலம், உங்கள் மூளை மற்றும் உடலுக்கு ஒரு சிறந்த ஆரோக்கியமான நாளைத் தரலாம்
பரபரப்பான வேலை அட்டவணைகள், தற்காலிக விடுமுறைத் திட்டங்கள் மற்றும் முடிவில்லாத செய்ய வேண்டியவைகளின் பட்டியல் ஆகியவற்றுக்கு மத்தியில், நாம் அனைவரும் முழுமையாக வாழவும், நமது சிறிய மற்றும் தனித்துவமான முறையில் ஆரோக்கியமாக இருக்கவும் நம்மால் முடிந்ததைச் செய்கிறோம் என்பது மறுப்பதற்கு இல்லை. ஆரோக்கியம் மற்றும் அது சார்ந்த பிற நன்மைகளின் முக்கியத்துவத்தை நினைவூட்டுவது முக்கியம். சரியான உணவுகளை உண்பது, உங்கள் உடல் அதற்கு உகந்த ஆரோக்கியத்துக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைப் பெறுவதை உறுதி செய்கிறது.- இதனால் உங்கள் உடல் மட்டுமல்ல, உங்கள் மனமும் கூட வலுவடைகிறது.
உங்கள் தினசரி உணவில் சிறிதளவு அக்ரூட் பருப்புகளைச் சேர்ப்பதன் மூலம், உங்கள் மூளை மற்றும் உடலுக்கு ஒரு சிறந்த ஆரோக்கியமான நாளைத் தரலாம் என ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் யோகா ஆலோசகர் பகிர்ந்து கொள்கிறார், "சிறிதளவு அதாவது தோராயமாக 4 கிராம் புரதம், 2 கிராம் நார்ச்சத்து மற்றும் 2.5 கிராம் தாவர அடிப்படையிலான ஒமேகா-3 ஆகியவற்றைக் கொண்டவை அக்ரூட் பருப்புகள். இந்த நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நமது இதயம், மூளை மற்றும் குடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்று அறியப்படுகிறது."
அக்ரூட் பருப்புகள் கடுமையான தரக் கட்டுப்பாடுகளின் கீழ் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? வால்நட் பழத்தோட்டம் நடுவது முதல் புதிய, சுவையான வால்நட்களை நமது உள்ளூர் சந்தைகளுக்கு வழங்குவது வரையில் இது தொடர்கிறது. அது மட்டுமின்றி, இந்த அற்புதமான மொறுமொறுப்பான மற்றும் லேசான இனிப்பான கொட்டைகள், நமது அன்றாட உணவில் சேர்க்கப்படும் போது, ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவும் என ஆராய்ச்சி காட்டுகிறது.
ஆரோக்கியமான இதயத்திற்கு வால்நட்: நல்ல கொழுப்புகள் (தாவர அடிப்படையிலான ஒமேகா-3 ALA) உள்ள வால்நட்கள் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம். அவை ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்கவும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தியில் கவனம் செலுத்துங்கள்: வால்நட்ஸ் தாவர அடிப்படையிலான வைட்டமின் பி, துத்தநாகம் மற்றும் செலினியம் ஆகியவற்றின் மூலமாகும் இது நோய் எதிர்ப்புசத்தினை உறுதி செய்கிறது.
எடை பராமரிப்பு: நம்மில் பெரும்பாலோர் உடல் எடையை குறைக்கவும் சரியான வடிவத்தை பெறவும் உடற்பயிற்சி செய்கிறோம். அக்ரூட் பருப்புகள் உங்களுக்கு அந்த கூடுதல் கலோரிகளை வெளியேற்றாது என்றாலும், அவை நிச்சயமாக எடை பராமரிக்க உதவும். பசியின்மை ஹார்மோன்களை பாதிப்பதில் வால்நட்ஸின் சாத்தியமான பங்கை ஆராய்ச்சி காட்டுகிறது.
நீரிழிவு அபாயத்தைக் குறைக்கிறது: இந்தியாவின் மிகவும் பொதுவான நோய்களில் ஒன்று நீரிழிவு நோய், குறிப்பாக வகை 2 நீரிழிவு நோய் இங்கே பெரும்பாலானவர்களை பாதிக்கிறது. ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக வால்நட்ஸ் நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறியை நிர்வகிக்க உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. 34,000 க்கும் மேற்பட்ட வயதான அமெரிக்கர்களிடையே நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் வால்நட் சாப்பிடாத பெரியவர்களுடன் ஒப்பிடும்போது, வால்நட் சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு 50 சதவிகிதம் குறைவதாகக் கூறப்படுகிறது.
வால்நட்டை எதில் சேர்க்கலாம்?
உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க, உடற்பயிற்சிக்கு முந்தைய/பிந்தைய வொர்க்அவுட்டை ஸ்மூத்தியில் வால்நட்டைக் கலக்கவும்.
ஒமேகா-3 நிறைந்த உணவு சிற்றுண்டியாக மாற்ற அதை உங்கள் சாலட் கலவையில் தூவலாம்.
உங்கள் கறிகள் மற்றும் டிக்காக்களில் அவற்றைச் சேர்க்கலாம் இதனால் அதில் சேர்க்கப்படும் பிற க்ரீம்களை தவிர்க்கலாம்.
உங்கள் இறைச்சி மற்றும் கடல் உணவுகளை நறுக்கிய அக்ரூட் பருப்புகளுடன் உட்கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )