Havana Sydrome: இந்தியாவில் பரவும் மர்மமான நோய்.. ஹவானா சின்ட்ரோம் என்றால் என்ன?
இந்தியாவில் பரவி வரும் மர்ம நோயான ஹவானா சிண்ட்ரோம் பற்றி மத்திய அரசு ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஹவானா நோய்க்குறியின் சாத்தியக்கூறுகளை ஆராய மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
ஹவானா சிண்ட்ரோம் மற்றும் அறிகுறிகள்:
நாட்டில் உள்ள மர்ம நோய் குறித்து விசாரணை நடத்தக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பெங்களூரில் வசிக்கும் அமர்நாத் சாகு, இந்தியாவில் பரவும் இந்த மர்ம நோய் குறித்து விசாரணை நடத்தி அதனை தடுப்பதற்கான வழிமுறைகளை கொண்டு வரவேண்டும் என அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். கடந்த வாரம் இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது அப்போது ஹவானா சிண்ட்ரோம் குறித்து மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 மாதத்திற்குள் இந்த விசாரணையை முடிக்கவும், இது தொடர்பாக ஆய்வு செய்யவும் மத்திய அரசு வழக்கறிஞர் ஒப்புக்கொண்டார்.
ஹவானா சிண்ட்ரோம் என்பது அமெரிக்க உளவுத்துறை மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள தூதரக அதிகாரிகள் மத்தியில் ஏற்படும் மனநல பாதிப்பை குறிக்கும் சொல் ஆகும். ஒருவருக்கு தானாக சத்தம் கேட்பது, தலைச்சுற்றல், தலைவலி, நினைவு இழப்பு மற்றும் குழப்பநிலை ஆகியவை இந்த நோயின் அறிகுறிகளாகும்.
2016 ஆம் ஆண்டில், கியூபாவின் ஹவானாவில் உள்ள தூதரகத்தில் அமெரிக்க அதிகாரிகள் மத்தியில் இந்த நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, ஹவானா சிண்ட்ரோம் கண்டுபிடிக்கப்பட்டது. முதன் முதலில் ஹவானாவில் இந்த நோய் தோன்றியதன் காரணமாக இதற்கு ஹவானா சிண்ட்ரோம் என பெயரிடப்பட்டது. இந்த நோய்க்கான மூல காரணம் தெரியவில்லை என்றால் கூட இது பெரும்பாலும் microwave அலைவரிசை காரணமாக வருகிறது என கூறப்படுகிறது. 2021 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் (சிஐஏ) இயக்குனர் வில்லியம் பர்ன்ஸ் உடன் டெல்லிக்குச் சென்ற அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஹவானா நோய்க்குறியுடன் ஒத்த அறிகுறிகள் அவருக்கு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள இராணுவ வீரர்களால் மத்தியில் இந்த நோய் அறிகுறிகள் தோன்றியதாக கூறப்படுகிறது.
இந்த நோயில் பக்கவிளைவாக ஒரு சில நபர்களுக்கு காது கேளாமை, நினைவாற்றல் இழப்பு மற்றும் குமட்டல் ஆகியவை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அறிகுறிகளின் சரியான காரணம் தெரியவில்லை. ஹவானா நோய்க்கு தற்போது வரை சரியான சிகிச்சை எதுவும் இல்லை. இந்த குழப்பமான நிலைக்கு சாத்தியமான காரணங்கள் மற்றும் சிகிச்சைகள் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து வருகிறது.
Watch: குட்டி மானை காப்பாற்ற போராடும் தாய் மான்… குள்ளநரியோடு சண்டை செய்யும் வீடியோ வைரல்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )