Covid - Eris Variant: உலக நாடுகளை அச்சுறுத்தும் புதிய கொரோனா வகை.. இந்தியாவில் பரவும் அபாயம்? நிபுணர்கள் சொல்வது என்ன?
உலக நாடுகள் மத்தியில் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான எரிஸ், இந்தியாவில் பரவுமா இல்லையா என்பது குறித்து நிபுணர்கள் சொல்வதை பார்க்கலாம்.
![Covid - Eris Variant: உலக நாடுகளை அச்சுறுத்தும் புதிய கொரோனா வகை.. இந்தியாவில் பரவும் அபாயம்? நிபுணர்கள் சொல்வது என்ன? whether Eris, a new variant of the corona virus that is spreading among countries, will spread in India or not? Covid - Eris Variant: உலக நாடுகளை அச்சுறுத்தும் புதிய கொரோனா வகை.. இந்தியாவில் பரவும் அபாயம்? நிபுணர்கள் சொல்வது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/08/16b8e696f017a567f67b1aadf26aa0811691467867264589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இங்கிலாந்தில் கொரோனா வைரஸின் துணை மாறுபாட்டின் பரவலானது, மீண்டும் உலகளாவிய தொற்றுநோய்க்கு வழிவகுக்குமா என்பது குறித்து அனைத்து நாடுகளுக்கும் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அச்சங்களுக்கு மத்தியில், 'எரிஸ்' மாறுபாடு இந்தியாவில் பரவுமா இல்லையா என்பது பற்றி பார்க்கலாம்.
இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவத்தொடங்கியது. கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த கொடிய நோய்த்தொற்றிலிருந்து மக்களை காக்க அரசு தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள், ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டன. சுமார் 2 ஆண்டுகள் இந்த நோயின் தாக்கம் தீவிரமாக இருந்தது. முதல் அலையை ஒப்பிடும் போது இரண்டாம் அலை மிகவும் கடுமையான தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தியது.
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வரம்பின்றி மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தது. இரண்டாம் அலையில் இந்தியாவில் தினசரி தொற்று பாதிப்பு என்பது 4 லட்சமாக இருந்தது. தடுப்பூசி முகாம்கள், பரிசோதனை முறை, தனிமைப்படுத்தும் முறை என தொடர் முயற்சிகள் மூலம் மெல்ல மெல்ல இந்த நோய் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 100 க்கும் கீழ் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏறக்குறைய ஒரு வருட காலமாக கொரோனா தொற்று குறைந்த நிலையில், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற பல நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகின்றன. இந்த புதிய மாறுபாட்டிற்கு எரிஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த வகை இன்னும் இந்தியாவில் தென்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கொரோனா மாறுபாடு எரிஸ், இந்தியாவில் மற்றொரு தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் இருந்தாலும், இந்த புதிய மாறுபாடு இந்திய மக்களிடையே பரவ வாய்ப்பில்லை என்று பல நிபுணர்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.
கொரோனாவின் எரிஸ் மாறுபாடு இந்தியாவில் தொற்றுநோயின் புதிய அலையை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்றும் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு ஏற்கனவே வைரஸுக்கு எதிராக, குறிப்பாக XBB துணைப் மாறுபாட்டிற்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அடைந்துள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸின் எரிஸ் மாறுபாட்டின் பரவல் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், தொற்றுநோயைத் தவிர்க்க பொது இடங்களில் அனைவரும் சரியான கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
முன்னதாக, இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு நிறுவனம், (UKHSA) புதிய எரிஸ் மாறுபாடு ஏழு பேரில் ஒருவருக்கு உறுதி செய்யப்படுவதாகவும், இந்த வைரஸ் மாறுபாடு வேகமாக பரவி வருவதாகவும் தெரிவித்து இருந்தது. இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு நிறுவனத்தின் கூற்றுப்படி, ”கடந்த வாரத்தை ஒப்பிடும்போது, இந்த வாரம் கொரோனா பாதிப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து உள்ளது. ரெஸ்பிரேட்டரி டேட்டாமார்ட் சிஸ்டம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 4,396 பேரில் 5.4% நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த வாரத்தை ஒப்பிடும்போது சற்று அதிகரித்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)