Lemon Water: நீங்கள் அடிக்கடி லெமன் வாட்டர் குடிப்பீங்களா? ப்ளீஸ் இதைப் படிங்க..!
என்னதான் உடலுக்கு நன்மை தரும் பொருள் என்றாலும் அதை எடுத்துக் கொள்ளும் அளவு, நேரம், காலம் எல்லாம் முக்கியமானது.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அது அமிர்தத்துக்கு மட்டுமல்ல எல்லாவற்றிற்கும் பொருந்தும். என்னதான் உடலுக்கு நன்மை தரும் பொருள் என்றாலும் அதை எடுத்துக் கொள்ளும் அளவு, நேரம், காலம் எல்லாம் முக்கியமானது. அந்த வகையில் நாம் வெகு சாதாரணமாக அருந்தும் லெமன் வாட்டர் அளவுக்கு அதிகமானால் என்னென்ன உபாதைகள் ஏற்படும் என்று பார்க்கலாம். வைட்டமின் சி அதிகமாக இருக்கும் லெமன் வாட்டர் நிறைய நோய்களை எதிர்க்கக்கூடியது என்றாலும் கூட.
லெமன் வாட்டரின் 7 பொதுவான நன்மைகள்:
ஜீரணத்திற்கு உதவுகிறது
நீர்ச்சத்துடன் இருக்க உதவுகிறது
எடை குறைப்புக்கு உதவுகிறது
ஆக்ஸிடேஷனை தடுக்கிறது
வைட்டமின் சி தருகிறது
தேவையான பொட்டாசியம் தருகிறது
சிறுநீரக கற்களை தடுக்கிறது.
உடல் எடையை குறைப்பதற்கு லெமன் வாட்டர் மிகவும் உதவுகிறது. தொப்பை உள்ளவர்கள் லெமன் வாட்டரை நிச்சயமாக அருந்த வேண்டும். அதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் பண்புகள் உடலை உறுதி செய்யும். லெமன் வாட்டரில் ப்ளாக் சால்ட் சேர்த்து பருகி வந்தால் உடலின் PH அளவை சீராக வைத்திருக்கும். அதேபோல் சரும வியாதி, அசிடிட்டி, ஆர்த்ரிடிஸ் போன்ற நோய்களுக்கும் அது நல்ல மருந்து. ரத்தம் கட்டிக்கொள்வதை கருப்பு உப்பு தடுக்கும், கொலஸ்ட்ராலையும் கட்டுக்குள் வைத்திருக்கும். இந்த இரண்டு பண்புகளும் எலுமிச்சைக்கும் இருப்பதால் இரண்டையும் சேர்த்து பருகுவது சாலச்சிறந்தது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இதை அளவுக்கு அதிகமாகக் குடிக்கும்போது வயிற்று உபாதைகள், நீர்ச்சத்து குறைபாடு, பல் சிதைவு, முடி உதிர்தல், மைக்ரைன் தலைவலி போன்றவை ஏற்படும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
வயிற்று உபாதைகள்:
லெமன் வாட்டரை அளவுக்கு அதிகமாக உண்பதால் செரிமானக் கோளாறுகள் ஏற்படும். லெமன் வாட்டர் அதிகமாகும் போது உணவு ஜீரணமாவதும் குறையும். இதனால் வயிற்று வலி, வயிறு உப்புசம் ஆகிய தொந்தரவுகள் ஏற்படும்.
நீர்ச்சத்து குறைபாடு:
லெமன் வாட்டர் என்பது உடலில் உள்ள நச்சுத் தன்மைகளை அகற்றக்கூடியது. ஆனால் லெமன் வாட்டரை அதிகமாக அருந்தும்போது அதனால் ப்ளாடர் வீங்கக்கூடும். அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் உடலில் நீர்ச்சத்து குறையும். லெமன் சார்ந்த பானங்களை அருந்திய பின்னர் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
பல் சிதைவுக்கு வாய்ப்புள்ளது
லெமன் வாட்டர் என்பது அசிடிக் தன்மை கொண்டது. அதனால் அதை அதிகமாக அருந்திவந்தால் பற்களில் ஒருவித கூச்சம் உண்டாகும். எனாமல் டீக்கே எனப்படும் பாதிப்பு ஏற்படலாம். பற்களில் உள்ள ரசாயனக் கோட்டிங் சேதமடைந்தால் இந்த கூச்சம் உண்டாகும். இந்த சேதத்தை எலுமிச்சையின் அமிலத் தன்மை அதிகரிக்கும்.
முடி உதிர்தல்:
அளவுக்கு அதிகமாக லெமன் வாட்டர் அருந்தினால், அதனால் கேச பாதிப்பு ஏற்படும். சிலர் எலுமிச்சை சாறை நேரடியாக முடியில் தேய்ப்பார்கள். பளபளப்பாக அவ்வாறு தேய்ப்பார்கள். ஆனால் அதன் பக்க விளைவாக முடி வறண்டு போய்விடும். மேலும் இளநரைக்கும் வாய்ப்பு உருவாகும். எலுமிச்சையில் உள்ள அமிலத் தன்மை உங்கள் முடியின் தன்மையையே சிதைத்துவிடும்.
மைக்ரைன் தலைவலி:
மைக்ரைன் தலைவலி இருப்பவர்கள் லெமன் வாட்டரை அதிகமாக எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சிட்ரஸ் பழங்கள் மைக்ரைன் தலைவலியை அதிகரித்துவிடும் தன்மை கொண்டது. எலுமிச்சையில் உள்ள டைராமின் எனும் வேதிப்பொருள் மைக்ரைன் தலைவலியை தீவிரமாக்கக் கூடியதாகும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )