மேலும் அறிய

Ragi bun dosa :கால்சியம், இரும்புச்சத்து நிறைந்த கேழ்வரகு பன் தோசை...செய்முறை இதோ...

Ragi Bun Dosa : சுவையான கேழ்வரகு பன் தோசை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் 

கேழ்வரகு மாவு - ஒரு கப், ரவை - ஒரு கப், தயிர் - அரை கப், தண்ணீர் - 1 கப்

தாளிப்பதற்கான பொருட்கள்

சமையல் எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், சீரகம் - அரை ஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, தக்காளி - 1, துருவிய சிறு கேரட் அல்லது பீட்ரூட் - 1, கொத்தமல்லி தழை - அரை கைப்பிடி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவிற்கு கேழ்வரகு மாவுடன்  ஒரு கப் அளவிற்கு ரவை சேர்க்க வேண்டும்.

ரவையை வறுத்தோ அல்லது வறுக்காமலோ சேர்த்துக் கொள்ளலாம்.

இதே கப் அளவிற்கு அரை கப் தயிர் சேர்த்து, ஒரு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து, இதை அப்படியே ஊற விட்டுவிட வேண்டும்.

இதனை அடுத்து, அடுப்பைப் பற்றவைத்து அதில் ஒரு கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும்,  கடுகு சேர்த்து பொரிய விட வேண்டும்.

கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமானதும், இதனுடன் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

ஒரு பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடி பொடியாக நறுக்கி இதில் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

வெங்காயம் ஓரளவுக்கு வதங்கி வரும்போது, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். இவை வதங்கியதும், ஒரு கைப்பிடி அளவிற்கு கொத்தமல்லி தழையை சுத்தம் செய்து, பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கேழ்வரகின் பயன்கள் 

கேழ்வரகு (Ragi) கால்சியத்தின் சிறந்த மூலமாகும். இது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) போன்ற நிலைகளைத் தடுப்பதற்கும் மிகவும் அவசியம்.

கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற மற்ற தாதுக்களுடன் இணைந்து வலுவான எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்க மற்றும் பராமரிக்க கேழ்வரகு உதவுகிறது.

கேழ்வரகை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் எலும்பு ஆரோக்கியம் மேம்படும் என கூறப்படுகிறது. 

கேழ்வரகில், கார்போஹைட்ரேட்,  நார்ச்சத்து, புரதங்கள் மற்றும் கால்சியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

செரிமானத்தை மேம்படுத்துவதுடன், வழக்கமான குடல் இயக்கங்களை எளிதாக்க கேழ்வரகு உதவுகிறது. 

மேலும் படிக்க 

Paneer Peas: நாண், சப்பாத்திக்கு பெஸ்ட் காம்போ! பனீர் பட்டாணி கிரேவி செய்முறை இதோ!

Makhana Payasam: பொங்கல் ஸ்பெஷல் ரெசிபி! சுவையான தாமரை விதை பாயாசம் செய்முறை இதோ!

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

வங்கக்கடலில் புதிய தாழ்வு பகுதி: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? - வானிலை அறிக்கை
வங்கக்கடலில் புதிய தாழ்வு பகுதி: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? - வானிலை அறிக்கை
நவ.20-இல் திருச்சி செல்லும் முதல்வர் - இடைத்தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தலா?
நவ.20-இல் திருச்சி செல்லும் முதல்வர் - இடைத்தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தலா?
சிறுபான்மையினருக்கான நிதியுதவி திட்டம் - தமிழக அரசு வெளியிட்ட புது அறிவிப்பு என்ன?
சிறுபான்மையினருக்கான நிதியுதவி திட்டம் - தமிழக அரசு வெளியிட்ட புது அறிவிப்பு என்ன?
சிக்கப்போவது யார்? - அறிவுலக புத்தக்கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சிக்கப்போவது யார்? - அறிவுலக புத்தக்கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வங்கக்கடலில் புதிய தாழ்வு பகுதி: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? - வானிலை அறிக்கை
வங்கக்கடலில் புதிய தாழ்வு பகுதி: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? - வானிலை அறிக்கை
நவ.20-இல் திருச்சி செல்லும் முதல்வர் - இடைத்தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தலா?
நவ.20-இல் திருச்சி செல்லும் முதல்வர் - இடைத்தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தலா?
சிறுபான்மையினருக்கான நிதியுதவி திட்டம் - தமிழக அரசு வெளியிட்ட புது அறிவிப்பு என்ன?
சிறுபான்மையினருக்கான நிதியுதவி திட்டம் - தமிழக அரசு வெளியிட்ட புது அறிவிப்பு என்ன?
சிக்கப்போவது யார்? - அறிவுலக புத்தக்கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சிக்கப்போவது யார்? - அறிவுலக புத்தக்கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சதமடித்து அலறவிட்ட ஆர்யவீர் சேவாக் - U19 கிரிக்கெட் தொடரில் ருத்ரதாண்டவம் ஆடிய சேவாக் மகன்!
சதமடித்து அலறவிட்ட ஆர்யவீர் சேவாக் - U19 கிரிக்கெட் தொடரில் ருத்ரதாண்டவம் ஆடிய சேவாக் மகன்!
Anbil Mahesh: முடியாத சிறைவாசம்..! அன்பில் மகேஷ் ஜாமின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் - நவ.18 வரை புழல் தானா?
முடியாத சிறைவாசம்..! அன்பில் மகேஷ் ஜாமின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் - நவ.18 வரை புழல் தானா?
தேதி குறிக்கும் தேர்தல் ஆணையம்.. 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் எப்போது? ஜனவரியில் வருது அறிவிப்பு!
தேதி குறிக்கும் தேர்தல் ஆணையம்.. 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் எப்போது? ஜனவரியில் வருது அறிவிப்பு!
TVK vs DMK: புத்தக ஊழலை கையில் எடுத்த தவெக... சட்டம் ஒழுங்கை கையில் எடுத்த திமுக! பரபரக்கும் அரசியல் களம்!
TVK vs DMK: புத்தக ஊழலை கையில் எடுத்த தவெக... சட்டம் ஒழுங்கை கையில் எடுத்த திமுக! பரபரக்கும் அரசியல் களம்!
Embed widget