மேலும் அறிய
மதுரை மாநகராட்சி அதிரடி.. தெருநாய்கள் தொல்லைக்கு முற்றுப்புள்ளியா? புதிய வாகனங்கள் பயன்பாட்டிற்கு!
ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 3 வாகனங்கள் மற்றும் புதிய 2 வாகனங்கள் சேர்த்து என மொத்தம் 5 வாகனங்கள் மூலம் மதுரை மாநகராட்சி ஐந்து மண்டலங்களில் நாய்கள் பிடிப்பதற்கு பயன்படுத்தப்பட உள்ளது.

மாநகராட்சிக்கு 2 வாகனம்
Source : whatsapp
மதுரை மாநகராட்சி ” தெருநாய்களை பிடிப்பதற்கு” புதிய வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தனியார் வங்கியின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் தெருநாய்களை பிடிப்பதற்காக வழங்கப்பட்ட புதிய வாகனங்களை ஆணையாளர் சித்ரா விஜயன், பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
தெருநாய்களுக்கு ரேபிஸ்
கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு தெருநாய்களின் தொல்லை அதிகளவு உள்ளதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது. தாங்கள் விரும்பும் செல்லப் பிராணிகளை வளர்க்கும் நபர்கள், அதனை தொடர்ந்து கவனிக்க முடியாமல் தெருக்களிலும், காட்டுப் பகுதிகளிலும் விட்டுச் செல்கின்றனர். இப்படியாக தெருநாய்கள் அதிகரித்து பொதுமக்களுக்கு தொல்லை கொடுப்பதாக கால்நடை பராமரிப்புத்துறையினர் கருதுகின்றனர். இந்த சூழ்நிலையில் நாய் இனப்பெருக்கம் செய்து தற்போது தெருக்களை ஆக்கிரமித்து ஆட்சி செய்கிறது. இதைக் கடந்து வீட்டிற்கு செல்வது மிகப்பெரும் சவாலாக அமைகிறது. இதில் எந்த நாய்க்கு ரேபிஸ் தொற்று இருக்கும் என்று யூகிக்க முடியாத அளவிற்கு பொதுமக்கள் அஞ்சி பதற்றத்துடன் வீடு சென்று நிம்மதி அடைகின்றனர். இப்படியான சூழ்நிலையை தான் நாள்தோறும் அவர்கள் அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாநகராட்சி தெருநாய்களை பிடிப்பதற்கு” புதிய வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சிக்கு புதிய நாய் வாகனங்கள்
மதுரை மாநகராட்சி ஐந்து மண்டலங்களுக்கு உட்பட்ட 100 வார்டுப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களை மாநகராட்சியின் நாய்கள் பிடிக்கும் 3 வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் தெருநாய்கள் தொல்லைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து புகார்கள் அதிகளவில் வருவதாலும், மாநகராட்சி பகுதிகளில் தற்போது நாய்கள் அதிகளவில் திரிவதால் அவற்றை பிடிப்பதற்காக தனியார் வங்கி (கரூர் வைஸ்யா வங்கி, மதுரை) பங்களிப்பின் மூலம் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிய 2 நாய்கள் பிடிக்கும் வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய 2 வாகனங்கள் சேர்த்து என மொத்தம் 5 வாகனங்கள்
ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 3 வாகனங்கள் மற்றும் புதிய 2 வாகனங்கள் சேர்த்து என மொத்தம் 5 வாகனங்கள் மூலம் மதுரை மாநகராட்சி ஐந்து மண்டலங்களில் நாய்கள் பிடிப்பதற்கு பயன்படுத்தப்பட உள்ளது. புதிதாக வழங்கப்பட்ட நாய்கள் பிடிக்கும் வாகனத்தை ஆணையாளர் பயன் பாட்டிற்கு கொண்டு வந்தார்கள்.
இந்நிகழ்வில் உதவி ஆணையாளர் (கணக்கு) வெங்கட்ரமணன், உதவி நகர்நல அலுவலர் மரு.அபிஷேக், கரூர் வைஸ்யா வங்கி முதன்மை மேலாளர் தினேஷ்குமார், முதுநிலை மேலாளர் மனோஜ்குமார், உதவி பொது மேலாளர் சதீஸ்பாபு, விற்பனை மேலாளர் வெங்கட் சிவசுப்பிரமணியன், கிளை மேலாளர் சொர்ணலதா, மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய உடல் நலம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் உடல் நலம் செய்திகளைத் (Tamil Health News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement




















