மேலும் அறிய
மதுரை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் மனநல ஆலோசனை மையம்: எதிர்காலத்திற்கு ஒரு புதிய வழி!
மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு “மனநல ஆலோசனை மையம்” ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மனநல ஆலோசனை
Source : whatsapp
மனநல ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் இந்த மனநல ஆலோசனை மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்” - என மதுரை மாநகராட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்ளப்பட்டுள்ளது.
மனநல ஆலோசனை மையம் (Counselling Centre)
மதுரை மாநகராட்சி மாணவர்களின் மனநலத்தை மேம்படுத்தும் நோக்கத்தில், மாநகராட்சி பள்ளிகளில் மனநல ஆலோசனை மையம் (Counselling Centre) ஏற்படுத்தப் பட்டுள்ளது. பள்ளி மாணவர்களிடைய காணப்படும் தற்கொலை எண்ணங்கள், தவறான பழக்க வழக்கங்கள், மனஅழுத்தம் மற்றும் பாடங்களில் குறைந்த மதிப்பெண்கள் போன்ற பிரச்சனைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தேவையான மனநல ஆலோசனையை வழங்கி மாணவர்களின் நலன் காக்க மாநகராட்சியின் சார்பில் மனநல ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் மாணவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிபடுத்தி நிபுணர் அவர்களின் ஆலோசனையைப் பெற முடியும். இதனால் மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டில் அதிக கவனம் செலுத்துவதற்கு இந்த மையம் ஒரு வாய்ப்பாக அமைகிறது.
எந்த பள்ளியில் எப்போது ஆலோசனை
இதற்காக வாரந்தோறும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரை மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களை நிபுணர் நேரடியாக சந்தித்து ஆலோசனை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமை – மாநகராட்சி ஈ.வெ.ரா. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தெற்கு வெளிவீதி, செவ்வாய்க்கிழமை – மாநகராட்சி மணிமேகலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காமராஜர் சாலை புதன்கிழமை – மாநகராட்சி மறைமலை அடிகளார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தெற்குவாசல், வியாழக்கிழமை – திரு.வி.க.மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, தத்தனேரி
வெள்ளிக்கிழமை – மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளி, செனாய்நகர் ஆகிய பள்ளிகளில் மனநல ஆலோசகர் தங்களின் பணியை மேற்கொள்வார்.
மனநல ஆலோசனை மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்
தேவையெனில் பிற மாநகராட்சி பள்ளிகளும் தங்கள் பள்ளி மாணவர்களை பெற்றோர் அனுமதியுடன் மேற்கண்ட பள்ளிகளுக்கு அழைத்து சென்று மனநல ஆலோசனை பெறலாம். மாநகராட்சி பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவின் (SMC) ஒத்துழைப்புடன் மனநல ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் இந்த மனநல ஆலோசனை மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்” - என மதுரை மாநகராட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய உடல் நலம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் உடல் நலம் செய்திகளைத் (Tamil Health News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















