ஆலிவ் ஆயில் தடவி பாருங்க! பொடுகு இருந்த இடம் தெரியாம ஓடிடும்...!
Dandruff natural treatment: ஆலிவ் எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளதால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி மயிர்கால்களுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
Olive oil benefits: ஆலிவ் ஆயில் தடவி பாருங்க பொடுகு இருந்த இடம் தெரியாம ஓடிடும்
ஆரோக்கியமான வலுவான முடிக்கு எண்ணெய் உபயோகிப்பது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் முடியை வலுவாக்கி வெப்பத்தினால் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது. இன்று சந்தையில் பல வகையன எண்ணெய்கள் விற்பனைக்கு இருந்தாலும் ஆலிவ் எண்ணெய் பல நன்மைகளை வழங்குகின்றன. ஆனால் ஆலிவ் எண்ணையின் நன்மைகள் பற்றி மக்கள் மத்தியில் முழுமையாக அறியப்படவில்லை.
சத்துக்கள் நிறைந்த எண்ணெய் :
ஆலிவ் எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளதால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி மயிர்கால்களுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. அது மட்டுமின்றி ஆலிவ் எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பொடுகு பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.
பொடுகு பாதுகாப்பு:
தலையில் வறட்சி, ஈஸ்ட் வளர்ச்சி மற்றும் மோசமான முடி பராமரிப்பு மற்றும் அளவுக்கு அதிகமாக முடி பராமரிப்பு தயாரிப்புகளை பயன்படுத்துவது போன்ற காரணங்களால் பொடுகு ஏற்படுகிறது. இது பொதுவாக பலருக்கும் இருக்கும் பிரச்சினை. இது போன்ற ஒரு சிக்கலை நீங்கள் அனுபவித்தால் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி அதனால் ஏற்படும் நன்மைகள் மூலம் பயனடையுங்கள். ஆனால் எண்ணெயை வாங்குவதற்கு முன்னர் அதன் நன்மைகள், பொடுகு சிகிச்சைக்கு அதன் பயன்பாடு என அனைத்தையும் பற்றி படித்து பார்க்க வேண்டும்.
அளவில்லா நன்மைகள்:
ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவதால் முடியில் ஈரப்பதத்தை தக்கவைப்பதன் மூலம் பொடுகு தொலையில் இருந்து பாதுகாக்கிறது. ஆன்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளதால் முடிக்கு கிளென்ஸராக பயன்படுகிறது. உச்சந்தலையை பலப்படுத்தி அழுக்குகளை நீக்குகிறது. ஸ்ப்ளிட் எண்ட்ஸ் இருப்பின் அதை சரி செய்கிறது. ஆலிவ் எண்ணெயில் இருக்கும் நிறைவுறா கொழுப்பு முடியை வளர்க்க உதவுகிறது. கண்டிஷனராகவும் அதை பயன்படுத்தலாம். மேலும் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் மற்ற முடி பிரச்சினைகளைகளில் இருந்தும் பாதுகாக்கிறது.
பொடுகு பாதுகாப்பு ஹேர் மாஸ்க்:
வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை முட்டை மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்த ஹேர் மாஸ்க்கை பயன்படுத்தலாம்.
ஆலிவ் எண்ணெயோடு பாதாம் எண்ணெய் சேர்த்து தடவி வந்தால் பொடுகு குறையும். ஆலிவ் எண்ணையில் எலுமிச்சை கலந்து தடவினாலும் பொடுகு குறையும். டீ ட்ரீ எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து தொடர்ந்து தடவி வந்தால் முடி வளர்ச்சியை அதிகரித்து பொடுகு தொல்லையை கட்டுப்படுத்தும். ஆலிவ் எண்ணெயுடன் மஞ்சளை சேர்த்து தடவி வந்தாலும் பொடுகுக்கு தீர்வு கிடைக்கும்.
ஆலிவ் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய், ஜோஜோபா எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆர்கான் எண்ணெய் ஆகியவை முடியின் ஆரோக்கியத்திற்கு நன்மையளிக்கும் மற்ற எண்ணெய்கள். அவற்றை பயன்படுத்துவதன் மூலமும் நன்மைகளை அடையலாம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )