Breakfast : காலை உணவு ஏன் அவசியம் தெரியுமா? கண்டிப்பா தவிர்க்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
காலையில் ஓர் அரசனைப் போலவும் இரவில் ஒரு யாசகனைப் போலவும் உணவு உண்ண வேண்டும் என்று கூறுவார்கள். அது உண்மையும் கூட.
காலையில் ஓர் அரசனைப் போலவும் இரவில் ஒரு யாசகனைப் போலவும் உணவு உண்ண வேண்டும் என்று கூறுவார்கள். அது உண்மையும் கூட. நீங்கள் காலை எழுந்தவுடன் சிந்திக்கும் முதல் விஷயம் காலை ஆகாரத்தைப் பற்றி இருந்தால் நல்லது. இது என்ன அட்வைஸ் என்று நீங்கள் சிரிக்கலா. ஆனால் அது எவ்வளவு உண்மை என்பதை இந்தக் கட்டுரையை வாசித்து பின்னர் புரிந்து கொள்வீர்கள்.
ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 6 முதல் 8 மணி நேரம் தூங்குகிறான். அதன் பின்னர் அவன் எழும்போது அவன் உடலில் ஒரு நாள் முழுவதும் இயங்கத் தேவையான சக்தி இருக்காது. அப்போது காலை உணவை அவன் அவனது உடல்வாகு, தட்பவெப்பம், உடற்பயிற்சி எல்லாவற்றையும் பொருத்து சாப்பிடும்போது ஒருநாளைக்கான சக்தியும் உள்ளச் சுறுசுறுப்பும் கிடைக்கும். பசித்த வயிறுடன் எந்த ஒரு வேலையையும் சுறுசுறுப்பாக செய்ய முடியாது என்பதால் தான் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு கொண்டுவரப்பட்டதற்குக் காரணம்.
அதேபோல் உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்றால். காலை உணவை தவறாமல் சாப்பிடுங்கள். காலை உணவை சாப்பிட்டுவிட்டால் அது அடுத்த வேலை வரை அவ்வப்போது ஏற்படும் ஹர்ங்கர் பேங்ஸ் எனப்படும் நொறுக்குத் தீனி சாப்பிடும் பழக்கம் குறையும்.காலை உணவை தவிர்த்துவிட்டு கண்ட வேளையில் கண்டபடி உணவு உண்டால் கொழுப்பு அதிகரிக்கும், இரத்த அடுத்தம் கூடும், உடல் பருமன் உண்டாகும், பக்கவாதம், இதய நோய்கள் ஏற்படும். இன்னும் ஏராளமான நோய்கள் ஏற்படக் கூடும்.
காலை உணவை தவறாமல் உட்கொள்பவர்களுக்கு ரத்த சர்க்கரை ஏற்படாது. இது இன்சுலின் சுரப்பை சீராக வைக்கும். காலை உணவு உண்ணாவிட்டால் உடலில் இன்சுலின் அளவு குறையும். மதிய உணவுக்குப் பின்னர் இன்சுலின் அளவு இரட்டிப்பாக அதிகரிக்கும்.
காலை உணவை சீராக உண்ணுவது மூளையை பாதுகாக்கும். சிந்தனை தெளிவு கிடைக்கும். காலை உணவை நீண்ட காலமாக தவிர்ப்பவர்களுக்கு ஞாபக மறதி எனப்படும் ஷார்ட் டெர்ம் மெம்மரி லாஸ் பாதிப்பு ஏற்படும்.
காலை உணவை தவிர்க்கும் நாளெல்லாம் உங்களுக்கு பசி உணர்வு துரத்தும்.அதனால் நீங்கள் ஜங்க் ஃபுட் நாடிச் செல்வீர்கள். ஒரு ஆரோக்கியமான காலை உணவை தவிர்த்தால் பலமுறை ஜங்க் ஃபுட் சாப்பிட்டாலும் கூட அது நிறைவைத் தராது. கடைசியில் சோர்வு மட்டுமே மிஞ்சும். உடலுக்கு தேவையான சத்துக்கள் பற்றாக்குறையாவதால் உள் உறுப்புகளும் திணறும். காலை உணவை ஒழுங்காக சாப்பிட்டால் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும்.
காலை உணவில் புரதம் நிறைந்திருக்க வேண்டும். முழு தாணியங்கள், பட்டைதீட்டப்படாத பருப்புகள், குறைந்த கொழுப்பு கொண்ட பால் பொருட்கள் ஆகியன அவசியம். அதேபோல் தாராளமாக காய்கறியும், பழங்களும் எடுத்துக் கொண்டாலும் நல்லது தான்.
முட்டையில் 60 % கொழுப்புகள் இருந்தாலும் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இதில் உள்ளன. இதில் ஏராளமான புரோட்டீன் மற்றும் வைட்டமின் டி சத்துகள் உள்ளன. இதிலுள்ள கொழுப்புகள் அதிகம் என் றாலும் நமது இரத்தத்தில் குறைந்த அளவே சேர்கின்றன என்று ஆராய்ச்சி தகவல்கள் கூறுகிறது. எனவே உங்கள் காலை உணவிற்கு முட்டை மிகவும் சிறந்தது. ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிட்டாலே போதுமானது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )