Yoga: இதய ஆரோக்கியத்தை யோகா மேம்படுத்துமா..? ஆய்வுகள் சொல்வது என்ன..?
எந்த வகையான யோகா செய்கிறோம், எவ்வளவு நேரம் செய்கிறோம், எந்த நேரத்தில், எவ்வளவு தீவிரமாக செய்கிறோம் என்பவை பொறுத்து பலன்களில் கணிசமான வேறுபாடு ஏற்படுகிறது.
கனடியன் ஜர்னல் ஆஃப் கார்டியாலஜியில் எல்சேவியர் வெளியிட்ட உயர் இரத்த அழுத்தம் உள்ள நபர்களின் மூன்று மாத பைலட் ஆய்வின்படி, இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உடற்பயிற்சிகளை விட யோகா மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. யோகா சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பைக் குறைத்து 10 வருட இதய ஆயுளை கூடுதலாக வழங்குகிறது என்று கூறுகிறார்கள்.
யோகா இருதய ஆரோக்கியத்திற்கு உதவுமா?
யோகா பயிற்சியானது உடற்பயிற்சியின் நெகிழ்வான வடிவமாகும், இது இருதய ஆரோக்கியம் மற்றும் பொது நல்வாழ்வுக்கு பயனளிக்கும். "வழக்கமான உடற்பயிற்சி பயிற்சி முறைக்குள் யோகாவைச் சேர்ப்பது இருதய ஆபத்தைக் குறைக்கிறதா என்பதைத் தீர்மானிப்பதே இந்த ஆய்வின் நோக்கம்" என்று கனடாவின் லாவல் பல்கலைக்கழகத்தில் முன்னணி ஆய்வாளர், பால் போரியர் விளக்கினார்.
"யோகாவின் மூலம் இருதயத்திற்கு நல்ல ஆரோக்கியம் கிடைப்பதற்கு சான்றுகள் இருந்தாலும், எந்த வகையான யோகா செய்கிறோம், எவ்வளவு நேரம் செய்கிறோம், எந்த நேரத்தில், எவ்வளவு தீவிரமாக செய்கிறோம் என்பவை பொறுத்து பலன்களில் கணிசமான வேறுபாடு ஏற்படுகிறது. இதனை கண்டறிய கடுமையான அறிவியல் அணுகுமுறையைப் பயன்படுத்த முயற்சித்தோம். இருதய நோயாளிகளுக்கு யோகா மூலம் நன்மை பெறக்கூடிய வழிகளைக் கண்டறிந்தோம்.
குழுக்களாக பிரிக்கப்பட்ட 60 பேர்
புலனாய்வாளர்கள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறி உள்ள 60 நபர்களை ஒரு உடற்பயிற்சி திட்டத்திற்காக நியமித்தனர். 3-மாத யோகா பயிற்சியின் மூலம் பங்கேற்பாளர்கள் 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். 15 நிமிடங்கள் கட்டமைக்கப்பட்ட யோகாவுடன், கூடுதலாக 30 நிமிட ஏரோபிக் உடற்பயிற்சியுடன் வாரத்திற்கு 5 முறை செய்யவைத்தனர்.
ஆராய்ச்சி முன்னேற்பாடுகள்
இரத்த அழுத்தம், ஆந்த்ரோபோமெட்ரி, உயர் உணர்திறன் சி-ரியாக்டிவ் புரதம் (hs-CRP), குளுக்கோஸ் மற்றும் லிப்பிட் அளவுகள் மற்றும் ஃப்ரேமிங்ஹாம் மற்றும் ரெனால்ட்ஸ் ஆபத்து ஆகியவை அளவிடப்பட்டன. அடிப்படையில், வயது, பாலினம், புகைபிடிக்கும் விகிதங்கள், உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ), ஓய்வு சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் இரத்த அழுத்தம், ஓய்வெடுக்கும் இதய துடிப்பு, அழுத்தம் ஆகிய பாதிப்புகள் இருப்பவர்கள் இரு குழுக்களிலும் ஒரே எண்ணிக்கையில் இருக்கும்படி இரு குழுக்களையும் பிரித்தனர். குழுக்களிடையே வேறுபாடு இல்லாமல் பார்த்துக்கொண்டனர்.
இதயத்துடிப்பை சீராக்கும் யோகா
3 மாதங்களுக்குப் பிறகு இவர்களுக்கு, ஓய்வு சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் இரத்த அழுத்தம் குறைந்தது, இரு குழுக்களிலும் தமனி இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு சீரானது. யோகா அணுகுமுறை இதயத் துடிப்பைக் நிலையாக்கியது. மேலும் ரெனால்டின் ரிஸ்க் ஸ்கோரைப் பயன்படுத்தி 10 வருட இருதய அபாயம் மதிப்பிடப்பட்டது.
"இந்த ஆய்வு உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு இருதய ஆபத்தைக் குறைத்தல் மற்றும் இரத்த அழுத்தக் கட்டுப்பாட்டிற்குள் வைத்தல், ஆகியவற்றிற்கு உதவுகிறது. மருந்து இல்லாமல் சிகிச்சை பெற விரும்புபவர்களுக்காக ஆதரவை வழங்குகிறது," என்று டாக்டர் போரியர் குறிப்பிட்டார். மேலும் "பல ஆய்வுகளில் கவனித்தபடி, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்களை நிர்வகிப்பதற்கான உடற்பயிற்சி மற்றும் மன அழுத்த நிவாரணமாக யோகாவை பரிந்துரைக்கலாம்." என்று கூறினார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )