![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Ishan Kishan Record: ருத்ரதாண்டவமாடிய இஷான்கிஷான்..! அதிவேக இரட்டை சதம்..! ஒருநாள் கிரிக்கெட்டில் புது வரலாறு..!
Ishan Kishan Record: வங்காளதேசத்துக்கு எதிராக இரட்டைச் சதம் விளாசி இஷான் கிஷன் உலக சாதனை வரிசையில் இடம் பிடித்துள்ளார்.
![Ishan Kishan Record: ருத்ரதாண்டவமாடிய இஷான்கிஷான்..! அதிவேக இரட்டை சதம்..! ஒருநாள் கிரிக்கெட்டில் புது வரலாறு..! Ishan Kishan Record: Ishan Kishan double hundred is amazing Against Bangladesh Ishan Kishan Record: ருத்ரதாண்டவமாடிய இஷான்கிஷான்..! அதிவேக இரட்டை சதம்..! ஒருநாள் கிரிக்கெட்டில் புது வரலாறு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/10/4073735bf8c5edb04271add1850cb13a1670660687755224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Ishan Kishan Record: இந்தியா வங்காளதேச அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டியில் இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசி உலக சாதனை வரிசையில் இடம் பிடித்துள்ளார்.
இஷான்கிஷான் இரட்டைச் சதம்:
ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்கிய இஷான் கிஷன் 126 பந்தில் 23 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர் உட்பட ரன்கள் குவித்துள்ளார். போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச தீர்மானித்தது. இதனால் களம் இறங்கிய இந்திய அணியின் ஷிகர் தவான் மற்றும் இஷான் கிஷன் ஜோடி இன்னிங்சை தொடங்கியது.
தொடக்கம் முதல் நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த இஷான் கிஷன் 49 பந்தில் அரைசதம் அடித்தார். அதன் பின்னர் அடித்து ஆடிய இஷான் கிஷன் பங்களாதேஷ் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் பறக்கவிட்டார். இஷான் கிஷன் 90 ரன்களில் இருந்த போது சிக்ஸர் அடிக்க முயற்சி செய்த போது கேட்ச் ஆகி தனது விக்கெட்டினை இழந்திருப்பார். ஆனால், கொடுத்த கடினமான கேட்ச்சை தவறவிடவே கண்டத்தில் இருந்து தப்பி, சதம் விளாசியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தினை இஷான் கிஷன் அடித்துள்ளார்.
ருத்ரதாண்டவம்:
அதன் பின்னர் ருத்ரதாண்டவமாடிய இஷான் கிஷன் 126 பந்தில் இரட்டைச் சதம் விளாசி அதகளப்படுத்தியுள்ளார். மேலும் இந்த இரட்டைச் சதத்தின் மூலம் இவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான தோனி மற்றும் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். மேலும், இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான சச்சின், சேவாக் ஆகியோரது சாதனையை சமன் செய்துள்ளார். சர்வதேச அரங்கில் அதிக ரன்கள் குவித்த விக்கெட் கீப்பர் எனும் சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
மேலும் குறைந்த பந்தில் இரட்டைச் சதம் விளாசிய வீரர் எனும் உலக சாதனையையும் இவர் படைத்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)