கொரோனா அறிகுறிகளா? முதலில் நீங்களே செய்துகொள்ளக்கூடிய முக்கிய வழிமுறைகள்... மருத்துவர் கூறுவது என்ன?
நாட்டில் குளிர்காலம் தொடங்கிவிட்டதால் காய்ச்சல், தோல் நோய்கள், டெங்கு, மலேரியா, மர்மக் காய்ச்சல் என விதவிதமான நோய்களும் வர வாய்ப்பிருக்கிறது.
கோடை காலத்திலிருந்து திடீரென்று நமது உடல் குளிருக்கு மாற்றத்தினை ஏற்பதால் உடல் வெப்பநிலைக் குறைந்து, ஏற்கெனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இன்னும் பிரச்சனை ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இருப்பவர்களுக்கு குளிர்காலத்தில் ஏற்படும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால், குளிர் காலங்களில் சூரிய ஒளி குறைவாக இருப்பதால் கிருமிகள் பெரும் வலிமையோடு வளர்ந்து விடுகிறது. சளி, காய்ச்சல், இருமல், சைனஸ், ஆஸ்துமா, தோல் நோய்கள், பாத வெடிப்புகள் போன்றவைதான் குளிர்காலத்தில் வரும் நோய்கள்.
இந்நிலையில் தற்போது கொரோனா தாக்கமும் அதிகருத்து வருவதால், கோவிட்-19 வோக்கார்ட் மருத்துவ குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான டாக்டர். ஹபில் கோராகிவாலா, “அத்தியாவசிய வேலைக்காக வெளியில் செல்லும்போது முகத்தில் முகக் கவசம் அணிந்துகொண்டு தைரியமாக வெல்ல வேண்டும். வீட்டிலேயே நாம் அனைவரும் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய சில எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்கிறார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான வழிமுறைகள்:
- வெதுவெதுப்பான உப்பு நீரில் ஆழமாக வாயை கொப்பளிக்கவும் அல்லது மருத்துவ மவுத்வாஷ் -ஐ ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு முறை எடுத்துக் கொள்ளவும். வாய் கொப்பளித்த சில மணி நேரங்களுக்கு உமிழ் நீர் வைரஸின் தாக்கத்தை குறைக்கும்.
- நீராவி பயன்படுத்திய பிறகு COVID-19 நோயாளிகளின் அறிகுறிகள் குறைவதாக ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. மேலும் இது தொற்று நோய்க்கு ஆளாகாமல் ஆரோக்கியமான சுவாசக் குழாயைப் பராமரிப்பதற்கு உதவுகிறது.
- குளிர்ந்த நீர் மற்றும் குளிரூட்டப்பட்ட பானங்களைக் குடிப்பதற்கு பதிலாக வெது வெதுப்பான நீரை பயன்படுத்த முயற்சிக்கவும்.
- தினமும் குறைந்தது ஐந்து நிமிடங்களாவது சில சுவாசப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள், முக்கியமாக அந்த பயிற்சிகள் உங்களுக்கு இலகுவாக இருக்க வேண்டும். ஆழமாக சுவாசிப்பதில் கவனம் செலுத்துங்கள். இந்த பயிற்சி தொற்று கடுமையாக பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கலாம்.
- எங்கும் செல்லாமல் வீட்டிலிருந்து வேலை செய்கிறோம் என்பதால், நடக்கவும், வெளிப்புறச் செயல்பாடுகளைச் செய்யவும் நமக்கு வாய்ப்பு இருப்பது இல்லை. ஆனால் ஆரோக்கியமாக இருக்க தினமும் 20-30 நிமிட உடல் பயிற்சிகளில் ஈடுபடுவது அவசியம். முதியவர்களும், உடல் நலக்குறைவு உள்ளவர்களும் உடற் பயிற்சியில் ஈடுபட முடிந்தவரை முயற்சி செய்யலாம்.
- முக்கியமானதாக சரியான முறையில் சரியான முகக் கவசத்தை அணிய வேண்டும். N95 ரக முகக் கவசங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், சரியான நோக்கத்திற்காக செயல்படாத ஆடம்பர துணிகளை கொண்டு அணியும் முகக் கவசத்தை அகற்றவும்.
இவ்வாறு மருத்துவர் ஹபில் கோராகிவாலா வலியுறுத்துகிறார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )