உலக முழுவதும் படையெடுத்த ஒமிக்ரான்: விமான சேவைக்கு தடைபோட்ட நாடுகள்!
கிறிஸ்துமஸ் வார இறுதியில் உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள் கிட்டத்தட்ட 4,300 க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளதாக அதிர்ச்சிகர தகவல் கிடைத்துள்ளது.
ஒமிக்ரான் தொற்றானது தென்னாப்பிரிக்காவில் இருந்து மற்ற நாடுகளுக்கு படிப்படியாக பரவி தற்போது இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது வரை இந்தியாவில் 400க்கும் மேற்பட்டோர் ஒமிக்ரான் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக, கடந்த 2 நாட்களில் மட்டும் இந்தியாவில் ஒமிக்ரான் வைரசின் பாதிப்பு இரு மடங்காக அதிகரித்து வருகிறது. ஒமிக்ரான் வைரஸ் மட்டுமின்றி டெல்டா வைரசின் தாக்கமும் அதிகளவில் இருந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் இதுவரை 415 ஒமிக்ரான் தொற்று கண்டறிப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 108 பேர், டெல்லியில் 79 பேர், குஜராத்தில் 43 பேர், தெலங்கானாவில் 38 பேர் பதிவாகியுள்ளனர். தொடர்ந்து, கேரளாவில் மொத்தம் 37 பேருக்கும், தமிழகத்தில் 34 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
Vaccines can offer protection but it is also essential to #WearAMask and avoid large crowds to keep #COVID19 away during the holiday season https://t.co/A66AF6Y7WF https://t.co/kXOxajjZsn
— World Health Organization (WHO) (@WHO) December 23, 2021
அதேபோல், ஐக்கிய நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்தில் ஒமிக்ரான் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொடர்ந்து, பல்வேறு நாடுகளில் இந்த தாக்கம் அதிகரித்து வருவதாக உலக சுகாதார மையமும் எச்சரிக்கை விடுத்து வருகிறது.
இந்தநிலையில்,கிறிஸ்துமஸ் வார இறுதியில் உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள் கிட்டத்தட்ட 4,300 க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளதாக அதிர்ச்சிகர தகவல் கிடைத்துள்ளது. அதேபோல், உலகளவில் கடந்த வெள்ளிக்கிழமை குறைந்தது 2,366 விமானங்களை ரத்து செய்துள்ளதாகவும், மேலும் 9,000 விமானங்கள் தாமதமாக பயணித்ததாகவும் தெரிகிறது.
ஒமிக்ரான் பரவல் காரணமாக கடந்த நவம்பர் 29 முதல் தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, நமீபியா, லெசோதோ, ஈஸ்வதினி, மொசாம்பிக் மற்றும் மலாவி ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு அமெரிக்கா பயணக் கட்டுப்பாடுகளை வித்திருந்த நிலையில், வருகிற டிசம்பர் 31 ம் தேதி முதல் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க இருப்பதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
பல ஐரோப்பிய நாடுகள் பண்டிகைக் காலத்திற்குப் பிறகு கட்டுப்பாடுகளை விதிக்கத் தயாராகி வருகின்றனர். ஜெர்மனி உட்பட 10 நாடுகள் பொது இடங்களில் தனிப்பட்ட கூட்டங்களை நடத்த டிசம்பர் 28 ம் தேதி வரை உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து, இரவு விடுதிகளை மூடவும், கால்பந்து போட்டிகள் மூடிய அரங்குகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்