Syringe Shortfall: அடுத்த ஆண்டில் சிரெஞ்சுகளுக்கு (ஊசி) தட்டுப்பாடு ஏற்படும் : உலக சுகாதார நிறுவனம் தகவல்
கொரோனா பரவல் காரணமாக பொதுமக்களுக்கு அதிகளவில் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டதால் அடுத்த ஆண்டு ஊசி, சிரெஞ்சுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
சீனாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு பரவிய கொரோனா தொற்று, உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை பலியாகியது. தொடர்ந்து, கொரோனா பரவலில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது
இதனையடுத்து, அந்தந்த நாடுகள் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது. இதன் காரணமாக கடந்த ஆண்டு உலகம் முழுவதும் 725 கோடி ஊசி சிரெஞ்சுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், போதுமான ஊசி சிரெஞ்சுகளை உற்பத்தி செய்ய முடியவில்லை.
இந்தநிலையில், கடந்த ஆண்டு பொதுமக்களுக்கு அதிகளவில் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டதால் அடுத்த ஆண்டு ஊசி, சிரெஞ்சுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, உலக சுகாதார நிறுவன முதன்மை ஆலோசகர் லிசா ஹெட்மென் தெரிவிக்கையில்,
”உலகம் முழுவதும் தற்போது வரை ஏறத்தாழ 725 கோடி ஊசி சிரெஞ்சுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஆண்டுதோறும் 600 கோடி சிரெஞ்சுகளையே மட்டுமே ஊசி சிரெஞ்சு தயாரிக்கும் நிறுவனங்களால் தயாரிக்க முடியும். ஏற்கனவே, இருப்பில் இருந்த ஊசி சிரெஞ்சுகள் முழுவதும் பயன்படுத்தப்பட்டுவிட்டது.
எனவே, அடுத்த ஆண்டு 100 கோடி முதல் 200 கோடி ஊசி சிரெஞ்சுகள் வரை தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும், அடுத்ததாக 2 வது தவணை ஊசி செலுத்திக்கொள்ள 700 கோடி ஊசி சிரெஞ்சுகள் வரை தேவைப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த ஆண்டுகளில் மிக பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கவலை கொள்கிறது.
சமீபத்திய உடல் நலம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் உடல் நலம் செய்திகளைத் (Tamil Health News) தொடரவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்