’குழந்தைகளுக்குக் கொரோனா ஊசி..? பொறுமையா போட்டுக்கலாம்!’ - மத்திய சுகாதார அமைச்சர் சொன்னது என்ன?
கொரோனா தடுப்பூசி ஆய்வில் ஆய்வு நிறுவனமான சைடஸ் காடிலா நிறுவனம் அவசர காலத்தில் தடுப்பூசியை உபயோகிப்பதற்கான அனுமதியை உலக சுகாதார மையத்திடம் பெற்றுள்ளது.
![’குழந்தைகளுக்குக் கொரோனா ஊசி..? பொறுமையா போட்டுக்கலாம்!’ - மத்திய சுகாதார அமைச்சர் சொன்னது என்ன? Don't want to rush, says health minister on Covid-19 vaccine for children ’குழந்தைகளுக்குக் கொரோனா ஊசி..? பொறுமையா போட்டுக்கலாம்!’ - மத்திய சுகாதார அமைச்சர் சொன்னது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/11/09a23d21c68df92d1498ee532d01392d_original.webp?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு பொறுமையாகச் செலுத்தத் திட்டமிட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
குழந்தைகளுக்குச் செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசி ஆய்வில் ஆய்வு நிறுவனமான சைடஸ் காடிலா நிறுவனம் அவசர காலத்தில் தடுப்பூசியை உபயோகிப்பதற்கான அனுமதியை உலக சுகாதார மையத்திடம் பெற்றுள்ளது.
Double good news for the nation!@CDSCO_INDIA_INF approves the 1st DNA-based, needle-free #COVID19 vaccine in the world - ‘ZyCov-D’ of @ZydusUniverse
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) August 20, 2021
Making children of India COVID-safe, this vaccine can be used for individuals aged 12 and above. (1/2) https://t.co/YP0ZZylOS7
இதற்கிடையே சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர். இந்தியாவில் சிறார்களில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்துள்ளது. இதற்கிடையேதான் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்த கேள்வியை அண்மையில் செய்தி ஊடக நிகழ்வு ஒன்றில் கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த அமைச்சர், ‘குழந்தைகள் தொடர்பான விவகாரம் என்பதால் இதில் துரிதப்படுத்த முடியாது.நிபுணர்கள் இதுகுறித்துக் கலந்தாலோசித்து வருகின்றனர்’ என்றார்.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர் தடுப்பூசி முயற்சியால்தான் குறைந்தது என்னும் நிலையில் சிறுவர்களுக்கான கொரொனா தடுப்பூசி காலதாமதப்படுவது அனைவரையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)