Corona New Cases: மீண்டும் தலைவிரித்தாடும் கொரோனா அச்சம்.. கேரளாவில் மட்டும் 300 பேருக்கு தொற்று, தமிழ்நாட்டில் என்ன நிலை?
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 358 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று மீண்டும் தன் ஆட்டத்தை காட்ட தொடங்கிவிட்டது. டிசம்பர் மாதம் வந்தாலே சென்னையை தாக்கும் வெள்ளம் போல், நவம்பர் - டிசம்பர் மாதங்களில் மீண்டும் கொரோனா வேகமெடுக்க தொடங்கி விடுகிறது.
கடந்த 2 நாட்களுக்கு மேலாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்றும் மீண்டும் பாதிப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 358 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எத்தனை பேருக்கு பாதிப்பு..?
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 358 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,அதில், அதிகபட்சமாக கேரளாவில் மட்டும் 300 பேர் பாதிக்கப்பட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு பாதிப்புகள்..?
- ஆந்திர பிரதேசம் - 1
- அசாம் - 1
- குஜராத் - 11
- ஹரியானா- 1
- ஜம்மு காஷ்மீர் - 1
- கர்நாடகா - 13
- கேரளா - 300
- மத்திய பிரதேசம் - 1
- மகாராஷ்டிரா - 10
- புதுச்சேரி - 2
- பஞ்சாப் - 2
- ராஜஸ்தான் - 2
- தமிழ்நாடு - 12
- தெலங்கானா - 5
- உத்திர பிரதேசம் - 2
என மொத்தம் 358 கொரோனா தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதன்மூலம், இந்தியாவில் உள்ள கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 2669 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் 3 பேர் உயிரிழப்பு:
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் கேரளாவில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கர்நாடகாவில் 2 பேரும், பஞ்சாபில் 1 பேர் என மொத்தம் 6 கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்துள்ளனர்.
- கேரளா - 3
- கர்நாடகா -2
- பஞ்சாப் - 1
இதன்மூலம், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை 5,33,327 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,44,70,576 ஆக உள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )