மேலும் அறிய

திருச்சி: ஒரேநாளில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு இதுவரை 10 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் கொரோனா, ஒமிக்ரான்  பாதிப்பு  குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. அண்டை மாநிலத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிவேகமாக பரவி வருவதால் மக்கள் மிகுந்த விழிப்புணவுடன் இருக்க வேண்டும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மக்களுக்கு தொற்று பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்கபட்டுள்ளது. குறிப்பாக மக்கள் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கபட்டுள்ளது. முககவசம் , சமூக இடைவெளியை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

மேலும் மக்கள் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும், அலட்சியமாக மக்கள் செயல்பட கூடாது என்றனர். குறிப்பாக அரசு கூறிய விதிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும், இல்லை என்றால்  நோய் தொற்று அதிக அளவில் பரவி பாதிப்பை ஏற்படுத்தும். கொரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டும்  என்று குறிப்பாக சிறார்களும் தடுப்பூசியினை தவறாமல் செலுத்திக்கொள்ள வேண்டும். நோய் தொற்றில் இருந்து நம்மை காத்துக்கொள்ள தற்போது ஒரே தீர்வு தடுப்பூசி தான் என அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

திருச்சி: ஒரேநாளில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த இரண்டு மாதங்களாக  கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை  குறைந்து வருகிறது. அதேசமயம் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.  இதனை தொடர்ந்து இன்று கொரோனா தொற்றால் 3 பேர் பாதிக்கபட்டுள்ளனர். அதேசமயம் ஒருவர் மட்டும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இன்று உயிரிழப்பு இல்லை என்பது சர்று ஆறுதல்.

இதனை தொடர்ந்து மருத்துவமனையில் 10 பேர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இதுவரை தொற்றால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 94942, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 93771, இறந்தவர்களின் மொத்தம் எண்ணிக்கை 1161 ஆகும். குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் இதுவரை 5 நபர்களுக்கு ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி: ஒரேநாளில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

மேலும் கொரோனா தொற்று வேகமாக பரவ கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். குறிப்பாக பொதுமக்கள் அரசு கூறும் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். பொது இடங்களில் கூட்டமாக மக்கள் இருப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் இரண்டு தவணை தடுப்பூசிகளை கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டும் இவற்றை நாம் முழுமையாக கடைப்பிடித்தாலே தொற்றில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் அலட்சியத்தினால்  தற்போது  கொரோனா தொற்று சற்று குறைந்து  வருகிறது. இந்நிலையில் மக்கள் மிகுந்த அலட்சியப்போக்கில் செயல்பட்டு வருகிறார்கள் இதனால் மீண்டும் தொற்று அதிக அளவில் பரவ வாய்ப்பு உள்ளது. ஆகையால் மக்கள் அலட்சியப்போக்கு தவிர்த்து பாதுகாப்பாக அரசு கூறும் நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget