மேலும் அறிய

Tamilnadu Corona Update: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1,596 பேருக்கு கொரோனா தொற்று: 21 பேர் உயிரிழப்பு!

தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்றாவது நாளாக அதிகரித்து ஒரேநாளில் 1,596 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,587இல் இருந்து 1,596 ஆக அதிகரித்துள்ளது. ஒருநாள் தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில் சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் 186 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 21 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,094 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்தது. ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 596 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 1587 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை 1596 ஆக அதிகரித்துள்ளது.  

தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 28 ஆயிரத்து 961 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 45 ஆயிரத்து 708 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 186 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 179 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 186 ஆக அதிகரித்துள்ளது.  கோயம்பத்தூரில் 224 பேரும், ஈரோட்டில் 130 பேரும், செங்கல்பட்டில் 108 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா நோய் தொற்றினால் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,094  ஆக உயர்ந்தது. அரசு மருத்துவமனைகளில் 18 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் ஏதும் இல்லாத  7 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 3 பேரும் உயிரிழந்துள்ளனர். 12 வயதுக்கு உட்பட்டவர்களில் 84 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னையில் மட்டும் மொத்தம் 8419 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கோவையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 16,221 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,534 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,77,646 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இன்று மாநிலம் முழுவதும் 42060 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 24624 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும் 8258 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. 

பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kanguva: உலகெங்கும் ரிலீசானது கங்குவா! தியேட்டரை திருவிழாவாக மாற்றும் சூர்யா ஃபேன்ஸ்!
Kanguva: உலகெங்கும் ரிலீசானது கங்குவா! தியேட்டரை திருவிழாவாக மாற்றும் சூர்யா ஃபேன்ஸ்!
TN Rain Alert: தமிழகத்தை ரவுண்டு கட்டிய கனமழை - 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை, சென்னை? வானிலை நிலவரம்
TN Rain Alert: தமிழகத்தை ரவுண்டு கட்டிய கனமழை - 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை, சென்னை? வானிலை நிலவரம்
TABCEDCO Loan Schemes: விவசாயிகளுக்கான எளிய கடன் -  வெறும்  6% மட்டுமே வட்டி - கொட்டி கொடுக்கும் தமிழக அரசு
TABCEDCO Loan Schemes: விவசாயிகளுக்கான எளிய கடன் - வெறும் 6% மட்டுமே வட்டி - கொட்டி கொடுக்கும் தமிழக அரசு
Kanguva Twitter Review : ஆஸ்கருக்கு சொல்லிடலாமா...சூர்யாவின் கங்குவா பட ரசிகர்கள் விமர்சனம் இதோ
Kanguva Twitter Review : ஆஸ்கருக்கு சொல்லிடலாமா...சூர்யாவின் கங்குவா பட ரசிகர்கள் விமர்சனம் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vignesh Mother | ’’ஒழுங்கா TREATMENT பாக்கலடாக்டர் தரக்குறைவா நடத்துனாரு’’விக்னேஷின் தாய் கதறல்Khalistani Terrorist attack Ram Temple | ”ராமர் கோயிலை இடிப்போம்”தேதி குறித்த தீவிரவாதிகள்Guindy Doctor Stabbed Accused Video | டாக்டருக்கு சரமாரி  கத்திக்குத்து!கூலாக நடந்து வந்த இளைஞன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanguva: உலகெங்கும் ரிலீசானது கங்குவா! தியேட்டரை திருவிழாவாக மாற்றும் சூர்யா ஃபேன்ஸ்!
Kanguva: உலகெங்கும் ரிலீசானது கங்குவா! தியேட்டரை திருவிழாவாக மாற்றும் சூர்யா ஃபேன்ஸ்!
TN Rain Alert: தமிழகத்தை ரவுண்டு கட்டிய கனமழை - 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை, சென்னை? வானிலை நிலவரம்
TN Rain Alert: தமிழகத்தை ரவுண்டு கட்டிய கனமழை - 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை, சென்னை? வானிலை நிலவரம்
TABCEDCO Loan Schemes: விவசாயிகளுக்கான எளிய கடன் -  வெறும்  6% மட்டுமே வட்டி - கொட்டி கொடுக்கும் தமிழக அரசு
TABCEDCO Loan Schemes: விவசாயிகளுக்கான எளிய கடன் - வெறும் 6% மட்டுமே வட்டி - கொட்டி கொடுக்கும் தமிழக அரசு
Kanguva Twitter Review : ஆஸ்கருக்கு சொல்லிடலாமா...சூர்யாவின் கங்குவா பட ரசிகர்கள் விமர்சனம் இதோ
Kanguva Twitter Review : ஆஸ்கருக்கு சொல்லிடலாமா...சூர்யாவின் கங்குவா பட ரசிகர்கள் விமர்சனம் இதோ
Breaking News LIVE: தமிழ்நாட்டில் இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: தமிழ்நாட்டில் இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
Breast engorgement: மார்பக வீக்கம், தவிக்கும் தாய்மார்கள்..! காரணம் என்ன? தவிர்ப்பது எப்படி? தீர்வுகள் இதோ..!
Breast engorgement: மார்பக வீக்கம், தவிக்கும் தாய்மார்கள்..! காரணம் என்ன? தவிர்ப்பது எப்படி? தீர்வுகள் இதோ..!
Kanguva: பாபி தியோலின்
Kanguva: பாபி தியோலின் "அந்த" வீடியோ! கங்குவா படத்திற்குள் வந்தது இப்படித்தான்!
"யாருக்கும் பாதுகாப்பு இல்ல" மருத்துவருக்கு கத்திக்குத்து.. சாட்டையை சுழற்றிய தவெக தலைவர் விஜய்!
Embed widget