Tamil Nadu Coronavirus LIVE : தமிழகத்தில் மேலும் 3,367 பேருக்கு கொரோனா தொற்று
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
மாநிலத்தின் தினசரி கொரோனா பாதிப்பில் ஈரோடு மாவட்டம் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், அங்கு 311 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 302 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 3885 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவையை விட ஈரோட்டில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
செங்கல்பட்டு தடுப்பூசி மையம் - டெண்டர் எடுக்கவில்லை
செங்கல்பட்டு வளாகத்தில் தடுப்பூசி தயாரிக்க யாரும் டெண்டர் கோரவில்லை என்று மத்திய ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார். செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தில் தடுப்பூசி தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விழுப்புரம் எம்பி ரவிக்குமார் எழுதிய கடிதத்திற்கு மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார். தடுப்பூசி தயாரிப்பு வளாகத்தை தனியாருக்கு ஏலம்விட மார்ச் 27ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டதாகவும், டெண்டர் காலம் நீட்டிக்கப்பட்டும் கூட அந்த நிறுவன ஏலத்தை எடுக்க யாரும் முன்வரவில்லை எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 2.39 சதவீதமாக உள்ளது
நாட்டின், வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு (Weekly Positivity Rate) ஐந்து சதவீதத்திற்கும் குறைவாக சரிந்து 2.39 சதவீதமாக உள்ளது. தினசரி தொற்று உறுதி வீதம் (Daily positivity Rate), தொடர்ந்து 16 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக, 2.29 சதவீதமாக பதிவாகி உள்ளது.
தினசரி குணமடைவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வருவதையடுத்து, தினசரி குணமடைவர்கள் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.
சென்னையில் 345 வாகனங்கள் பறிமுதல்
கொரோனா விதிமுறைகள் மீறியதாக சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 345 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.