(Source: ECI/ABP News/ABP Majha)
Tamil Nadu Coronavirus LIVE: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கொரோனா பலி இல்லை
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 3 ஆயிரத்து 715 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,55,371 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 3,715ஆக உள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து ஆயிரத்து 2 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 33 ஆயிரத்து 637 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 214 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 222 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 214 ஆக உள்ளது.
கொரோனாவால் மேலும் 54 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,059 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 35 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 19 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 8 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 12 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 5 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8227 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 3,715 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு

கொரோனாவை முறியடிக்க தடுப்பூசி தான் மிகச்சிறந்த நம்பிக்கை - பிரதமர் மோடி
கோவின் குளோபல் கான்கிளேவ் என்னும் பெயரில் நடைபெற்ற மாநாட்டில் காணொலி மூலம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கோவின் தளத்தைப் போன்று தங்கள் நாட்டிலும் செயல்படுத்தப் பல நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. 100 ஆண்டுகளில் கொரோனா போன்ற பெருந்தொற்றை உலகம் கண்டதில்லை. எந்தவொரு ஆற்றல் மிகுந்த நாடும் இது போன்ற சவாலை தனிமையில் சமாளிக்க முடியாது என்பதை அனுபவம் காட்டுகிறது. கொரோனாவை முறியடிக்க தடுப்பூசி தான் மிகச்சிறந்த நம்பிக்கை” என்றார்.
இங்கிலாந்து நாட்டில் அதிகரிக்கும் கொரோனா
இங்கிலாந்து நாட்டின் வருடாந்திர தொற்று பாதிப்பு விகிதம் 80% ஆக அதிகரித்துள்ளது. புதிய உருமாறிய டெல்டா வகை கொரோனா தொற்றுப் பரவல் இங்கிலாந்தில் அதிகரித்துள்ளது.
தீவிர பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் 7 நாள் சராசரி எண்ணிக்கை 55% ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, ஜூலை 19ம் தேதிக்குப் பிறகு, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்றும், காட்டயமில்லை என்றும் இங்கிலாந்து வீட்டுநலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் ஜூலை 19 சுதந்திர நாளாக கொண்டாடப்படுகிறது.
இங்கிலாந்து நாட்டில் வரும் ஜூலை 19ம் தேதி முதல் கொரோனா பொதுநிலையில் முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூலை 19-ஐ சுதந்திர நாளாக அந்நாடு கொண்டாட உள்ளது.
14 மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் - ரவிக்குமார் எம்.பி
14 மாவட்டங்களில் மாநில சுகாதாரத் துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என விழிப்புரம் எம்.பி ரவிக்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், " இன்று தமிழ்நாட்டில் 4382 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 3867 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். புதிய நோயாளிகளை விட குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை ஏறத்தாழ 500 அதிகமாக இருப்பது ஆறுதல் அளிக்கிறது.
ஆனால், கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், நீலகிரி, சேலம், தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்களில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குணமடைந்தோரின் எண்ணிக்கையை விட சற்று அதிகமாக இருக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 30.06.2021 முதல் தொடர்ந்து புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குணமடைந்தோரின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருப்பது கவலையளிக்கிறது. ஜூன் 30 ஆம் தேதி சிகிச்சைபெறும் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 461 ஆக இருந்தது அது 04.07.2021 இல் 540 ஆக உயர்ந்திருக்கிறது.
ஜூன் 30 ஆம் தேதி இருந்த நிலையோடு 04.07.2021 நிலையை ஒப்பிட்டால் 17 மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக சிகிச்சைபெறும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதில், ஈரோடு (134), கன்னியாகுமரி (155), நீலகிரி(152), திருவண்ணாமலை(154), திருச்சி(280) ஆகிய 5 மாவட்டங்களில் கடந்த ஐந்து நாட்களில் அதிகரித்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.