Tamil Nadu Coronavirus LIVE: தமிழ்நாட்டில் இன்று 2,913 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
நாடு முழுவதும் ஆக்ஸிஜன் ஆலைகள் அதிகரிப்பு மற்றும் முன்னேற்ற பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆலைகள் விரைவில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், இதற்காக மாநிலங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.
கூடுதலாக 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி
ஒரு குப்பியில் இருந்து 11 முதல் 12 நபர்கள் வரை என கூடுதலாக 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் 6 லட்சம் டோஸ் வரை தடுப்பூசி வீணடிக்கப்பட்டுள்ளது. மருந்து குப்பியில் 16 முதல் 24 சதவீதம் வரை கூடுதலாக இருக்கும் மருந்தை வீணாக்காமல் தடுப்பூசி போடப்படுகிறது - மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
12 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதுப்பு விகிதம் அதிகரித்துள்ளது
தமிழகத்தில் கடந்த 5ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களுக்கு ஒரே மாதிரயான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் 12 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதுப்பு விகிதம் அதிகரித்துள்ளது. சேலத்தில் அதிகபட்சமாக ஒரு வார பாதிப்புகள் 37% சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு தடை தொடர்கிறது.
பொதுமக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளுக்கு தொடர்ந்து தடை.
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான தடை தொடர்ந்து விதிக்கப்படுகிறது
தமிழ்நாட்டில் ஜூலை 19ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான தடை தொடர்ந்து விதிக்கப்படுகிறது.
ஜூலை 12ஆம் தேதிக்குள் 15.85 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்படும்
தமிழ்நாட்டுக்கு ஜூலை 12ஆம் தேதிக்குள் 15.85 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் ஒன்றிய அரசு வழங்கயிருப்பதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.