Sputnik Light | ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு சிக்கல்..! ரெட்டிஸ் ஆய்வகத்துக்கு மறுக்கப்பட்ட அனுமதி..! ஏன்?
ஒருமுறை செலுத்தக்கூடிய ஸ்புட்னிக் லைட்டுக்கான 2 சோதனைகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இதற்கான ஆய்வு மற்றும் பரிசோதனை முடிவுகள் தரவில்லை என கூறப்படுகிறது.
இந்தியாவில் ரஷ்ய தடுப்பூசி ஸ்பூட்னிக் லைட் குறித்த 3 ஆம் கட்டச்சோதனைகளை நடத்துவதற்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டி லேப்பிற்கு இந்திய மருந்துவக்கட்டுப்பாட்டு ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி மறுத்துள்ளது.
கொரோனா தொற்றின் அதிகரிப்பின் காரணமாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை தற்பொழுது பாரத் பயோடெக்சின் கோவாக்சின், சீரம் நிறுவனத்தின் கோவிஷூல்டு மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி ஆகிய மூன்று தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தான் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. மேலும் பல்வேறு தடுப்பூசிகள் தங்களது சோதனைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகின்றனர்.
குறிப்பாக இந்த தடுப்பூசி அனைத்தும் முதல் தவணை,இரண்டாம் தவணை என 2 முறைகளில் மக்களுக்கு செலுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினைக் கவனத்தில் கொண்டு, டாக்டர் ரெட்டி லேப் ரஷ்யா நிறுவனத்துடன் இணைந்து ஒரு முறை மட்டுமே செலுத்தும் வகையிலான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியினை தயாரித்து வருகிறது. இதற்கான 2 கட்ட சோதனைகள் அனைத்தும் முடிவு பெற்ற நிலையில், இறுதிகட்ட அதாவது 3 கட்ட சோதனை மேற்கொள்ளவதற்கு தற்பொழுது இந்திய மருத்துவக்கட்டுப்பாட்டு ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி மறுத்துள்ளது. இதனால் இந்தியாவில் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு அனுமதி மறுக்கக் காரணம்?
ரஷ்ய நேரடி முதலீட்டு நிறுவனம், தொற்றுநோய்வியல், நுண் உயிரியலுக்கான காமாலியா தேசிய ஆய்வுநிறுவனம் தயாரித்துள்ள கொரோனா வைரசுக்கு எதிராக ஸ்புட்னிக் தடுப்பூசியினை இறக்குமதி செய்ய இந்தியாவில் ரெட்டில் லேப் அனுமதி வழங்கியது. முன்னதாக ஸ்புட்னிக் வி க்கான அனைத்து சோதனைகளும் முடிவுற்ற நிலையில் தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது. இதனையடுத்து ஒருமுறை செலுத்தக்கூடிய ஸ்புட்னிக் லைட்டுக்கான 2 சோதனைகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இதற்கான ஆய்வு மற்றும் பரிசோதனை முடிவுகள் தரவில்லை என கூறப்படுகிறது. மேலும் கடந்த ஆய்வில் சிலக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகவும் தெரியவருகிறது. இந்நிலையில் தான் 3 கட்ட ஆய்வு நடத்த அனுமதியினை மத்திய அரசு மறுப்பதாக தகவல்கள் வெளிவரவிருகிறது. மேலும் இந்த 3 கட்டப் பரிசோதனையை மேற்கொள்வதற்கு அறிவியல் ரீதியாக சரியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை எனவும் கூறப்படுகிறது.
ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு வெளிநாட்டில் அனுமதி வழங்கி இருந்தாலும் முறையான ஆய்வுகள் முடிக்காமல் இந்தியாவில் பயன்படுத்த முடியாது. இந்நிலையில்தான் ஹைதராபாத்தினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ரெட்டி லேப், ஸ்புட்னிக் லைட் குறித்து ஆய்வுகளை வழங்குவதோடு விரைவில இதற்கான அனுமதியினை பெறுவோம் என தெரிவித்துவருகின்றனர்.