புதுச்சேரி: 251 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..! மேலும் 3 பேர் உயிரிழப்பு..!
புதுச்சேரியில் 251 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு போட்டும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு இரண்டாயிரத்தை தாண்டி வந்தது. புதுச்சேரி அருகேயுள்ள தமிழக மாவட்டங்களைச் சேர்ந்தோரும் புதுச்சேரியிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். மேலும், இறப்பவர்களின் எண்ணிக்கையும் தினந்தோறும் 29 தாண்டியே இருந்து வந்தது. இதனால் புதுச்சேரி மக்கள் மிகுந்த கவலைக்குள்ளாகி உள்ளனர். கடந்த வாரத்துக்கு முன்பு வரை கொரோனா நோய் பாதிப்பு ஆயிரத்துக்கு கீழ் குறைந்தே காணப்பட்டு வருகிறது. அதேபோல பலி எண்ணிக்கையும் 20-க்கு கீழ் வந்தபடி இருந்து வந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் 2 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 500-க்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால் புதுச்சேரியில் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் இன்று புதிதாக 251 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 14 ஆயிரத்து 847 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 583 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 2,979 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 3526 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 251 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 9 ஆயிரத்து 562 (95.40 சதவீதம்) ஆக உள்ளது. கொரோனா புதுச்சேரி மாநிலத்தில் 8414 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி – 200, காரைக்கால் – 31, ஏனாம் – 8, மாஹே – 12 பேர் என மொத்தம் 251 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதுவைமற்றும் காரைக்காலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் தொற்று குறைந்தாலும் உயிரிழப்புகள் எண்ணிக்கை குறையவில்லை, ஏப்ரல், மே மாதங்களில் உயிரிழப்புகள் உச்சத்தில் இருந்தன. ஜூன் மாதம் தொடங்கி ஒரு வாரத்தில் 102 பேர் வரை உயிரிழந்துள்ளனர். புதுவை மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,723 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 3,793 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 479 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து 1,09,562 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாகக் குறைந்துவருகிறது. கொரோனா தொற்றிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது குறிப்பிடத்தக்கது. குணமடைந்தோர் சதவீதம் 95.40. பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் சரியாக அணிந்து, தனிநபர் இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடித்து, கை சுத்தம் பேணி, கொரோனா தடுப்பூசியும் போட்டுக் கொண்டால் கொரோனாவில் இருந்து முற்றிலும் விடுபடலாம்" என்று குறிப்பிட்டார். கொரோனா தாக்குதல் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதால் புதுச்சேரி மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். முழு ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டால் மட்டுமே வழக்கமான நிலை திரும்பும் சூழல் நிலவுகிறது.