Omicron Variant: ''தமிழ்நாட்டில் ஒமிக்ரான் இல்லை.. ஆனா...'' சுகாதாரத்துறை கொடுத்த எச்சரிக்கை!
டெல்டா வைரஸ் பாதிப்புதான் தமிழ்நாட்டில் அதிகரித்து வருவதாகவும், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் இருந்தாலும் மக்கள் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் ராதாகிருஷ்ணன் கேட்டுகொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு இல்லை என சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராதாகிருஷ்ணன், “வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த 6 பேருக்கு இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு கொரோனா மட்டுமே உள்ளது. ஒமிக்ரான் என தவறான தகவலை பரப்பவேண்டாம். தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு இல்லை” என்றார்.
கடந்த இரண்டு நாட்களில் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த 4,500 பேரை சோதனை செய்துள்ளோம் என்றும், ஒமிக்ரான் தொற்று என்பது பதற்றம் அடையக் கூடிய உருமாற்றம் இல்லை என்றும் கூறினார். மேலும், டெல்டா வைரஸ் பாதிப்புதான் தமிழ்நாட்டில் அதிகரித்து வருவதாகவும், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் இருந்தாலும் மக்கள் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் ராதாகிருஷ்ணன் கேட்டுகொண்டுள்ளார்.
முன்னதாக, டெல்லியில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. தான்சானியா நாட்டில் இருந்து டெல்லி திரும்பிய நபருக்கு நடத்தப்பட்ட சோதனையில் ஒமிக்ரான் உறுதியானது. டெல்லியில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டதால் இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 5 ஆக அதிகரித்துள்ளது.
First omicron case detected in Delhi. The patient admitted to LNJP Hospital had returned from Tanzania. Till now, 17 people who tested positive for Covid have been admitted to the hospital: Delhi Health Minister Satyendar Jain pic.twitter.com/TwbXFpt3jV
— ANI (@ANI) December 5, 2021
ஒமிக்ரான் திரிபு முதல் முதலாக தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை உலக சுகாதார நிறுவனத்துக்கு நவம்பர் 24ம் தேதி தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுவதும் ஒமிக்ரான் பரவியது. இது மிகவும் வீரியமிக்கது என்றும் அதிவிரைவில் பரவக்கூடியது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். தென் ஆப்பிரிக்காக, நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஒமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் ஒமிக்ரான் இந்தியாவிலும் பரவத்தொடங்கியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )