மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
காஞ்சிபுரம் : நீண்ட நாட்களுக்குப் பிறகு 200-க்கு கீழ் குறைந்தது கொரோனா எண்ணிக்கை..!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நீண்ட நாட்களுக்கு பிறகு 200-க்கு கீழ் குறைந்துள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 176-ஆக பதிவாகியுள்ளது .
![காஞ்சிபுரம் : நீண்ட நாட்களுக்குப் பிறகு 200-க்கு கீழ் குறைந்தது கொரோனா எண்ணிக்கை..! kanchipuram and chengalpattu corona virus update and vaccince details காஞ்சிபுரம் : நீண்ட நாட்களுக்குப் பிறகு 200-க்கு கீழ் குறைந்தது கொரோனா எண்ணிக்கை..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/14/d180491125197b8e3b27c151328c24b1_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கொரோனா அப்டேட்
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை கடந்த இரண்டு மாதங்களாகவே தமிழ்நாடு முழுவதும் வேகமாக பரவி வந்தது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்தது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது.
![காஞ்சிபுரம் : நீண்ட நாட்களுக்குப் பிறகு 200-க்கு கீழ் குறைந்தது கொரோனா எண்ணிக்கை..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/16/1081bb9f6925c9dd830715ca32774de1_original.png)
ஊரடங்கு மற்றும் அதிக பரிசோதனை எதிரொலியாக தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகளவு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் இருந்து வந்தனர். இந்நிலையில் ஊரடங்கு எதிரொலியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக குறைய துவங்கியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1500-ஆக இருந்தது. ஊரடங்கும் எதிரொலியாக தற்போது கணிசமாக குறைந்தது நாளொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு 200-க்கு கீழ் குறைந்துள்ளது.
![காஞ்சிபுரம் : நீண்ட நாட்களுக்குப் பிறகு 200-க்கு கீழ் குறைந்தது கொரோனா எண்ணிக்கை..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/15/547d9949c147f76d51f1f3067d8611ab_original.jpg)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. நாளொன்றுக்கு காஞ்சிபுரம் பெரு நகராட்சி பகுதியில் மற்றும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் 250 இருந்து வந்த நிலையில் தற்போது மாவட்டம் முழுவதுமே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200-க்கு கீழ் சென்றுள்ளது.
![காஞ்சிபுரம் : நீண்ட நாட்களுக்குப் பிறகு 200-க்கு கீழ் குறைந்தது கொரோனா எண்ணிக்கை..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/14/3a1166208597f7d262c7c76995cca2c2_original.jpeg)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரு நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 176, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தவர் எண்ணிக்கை 4. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1368. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்புவர் எண்ணிக்கை 290. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்தரமேரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை முழுவதுமாக குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 723 நபர்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மாலை நிலவரப்படி 1500 டோஸ் தடுப்பூசி கையிருப்பு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய உடல் நலம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் உடல் நலம் செய்திகளைத் (Tamil Health News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion