தூத்துக்குடியில் இன்று ஒரேநாளில் 238 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த மாத ஆரம்பத்திலிருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவல் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும்75 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33984-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 39 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 32861-ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை652 இருக்கிறது. இந்நிலையில் 471 கொரோனா பாதிப்பால் திண்டுக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தேனி , தென்காசி , நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் விசாரித்தோம்.
தேனி மாவட்டத்தில் இன்று 176 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44613ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 394 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 43233ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 526 இருக்கிறது. இந்நிலையில் 856 கொரோனா பாதிப்பால் தேனியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்டத்தில் இன்று மட்டும் 256 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 52559-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 168 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 50034-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 439 இருக்கிறது. இந்நிலையில் 2086 கொரோனா பாதிப்பால் நெல்லை சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்காசி மாவட்டத்தில் இன்று 194 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 31 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28028-ஆக உயர்ந்துள்ளது. இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 27076-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் தென்காசிமாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 486 இருக்கிறது. இந்நிலையில் 482 கொரோனா பாதிப்பால் தென்காசி சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மட்டும் 238 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 59446-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 163 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 557108-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏதும் இல்லை என்பது ஆறுதல் . இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 419 இருக்கிறது. இந்நிலையில் 1919 கொரோனா பாதிப்பால் தூத்துக்குடி சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )