Omicron Variant: ஒமிக்ரான் தொற்று எப்படி கண்டறியப்படுகிறது? எஸ்-ஜீன் டிராப் அவுட் என்றால் என்ன?
ஒமிக்ரான் தொற்று எப்படி கண்டறியப்படுகிறது என்பது தெரியுமா?
தமிழ் திரைப்பட காமெடி நடிகர் வடிவேலுவிற்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் அவருக்கு உருமாறிய ஒமிக்ரான் தொற்றின் அறிகுறியான எஸ்-ஜீன் டிராப் அவுட்டும் கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு ஒமிக்ரான் தொற்று என்பது உறுதியாகவில்லை.
#BREAKING | நடிகர் வடிவேலுக்கு கொரோனா பாதிப்புhttps://t.co/wupaoCQKa2 | #Vadivelu | #Corona | #Omicron | #London pic.twitter.com/OyYrKTwpAw
— ABP Nadu (@abpnadu) December 24, 2021
இந்நிலையில் ஒமிக்ரான் தொற்று எப்படி கண்டறியப்படுகிறது? எஸ்-ஜீன் டிராப் அவுட் என்றால் என்ன?
கொரோனா வைரஸ் பாதிப்பை உலகம் முழுவதும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மற்றும் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டு வருகிறது. அதேபோல் உருமாறிய ஒமிக்ரான் தொற்றை ஆர்டிபிசிஆர் பரிசோதனை மூலம் கண்டறிய முடியும் என்று கூறப்படுகிறது. அதாவது ஆர்டிபிசிஆர் பரிசோதனை உடன் எஸ்-ஜீன் டிராப் அவுட் கிட் வைத்து பரிசோதனை செய்யும் போது ஒமிக்ரான் பாதிப்பின் அறிகுறி கிட்டத்தட்ட உறுதியாகும். அதன்பின்னர் அந்த தொற்றின் மரபணுக்களை ஆய்வு செய்து ஒமிக்ரான் தொற்றா என்பதை உறுதிசெய்ய முடியும். இயல்பாக ஒமிக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டால் கொரோனா மரபணுவில் எஸ்-ஜீன் என்பது இல்லாமல் இருக்கும்.
எஸ்-ஜீன் ட்ராப் அவுட் என்றால் என்ன?
உருமாறிய ஒமிக்ரான் கொரோனா தொற்றில் எஸ்-ஜீன் மரபணுவில் இருக்காது. ஆனால் எஸ்-ஜீன் இல்லாதது மட்டும் ஒமிக்ரான் தொற்றை உறுதி செய்துவிட முடியாது. அதை வைத்து வேகமாக அந்த தொற்றின் மரபணு மாற்றத்தை ஆராய்ந்தால் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உள்ளதா என்பதை அறிய முடியும்.
மேலும் படிக்க: S Gene ட்ராப் உறுதியானது.. வடிவேலுவுக்கு ஒமிக்ரான் தொற்று?
இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் ஈ,என்,ஆர்டி மற்றும் ஆர்பி ஜீன்கள் மட்டும் பரிசோதனை செய்யப்பட்டு வந்தன. இந்த ஜீன்கள் இருக்கும் பட்சத்தில் அவை கொரோனா தொற்று என்பது உறுதியாகிவிடும். தற்போது அந்த ஜீன்களுடன் சேர்ந்து எஸ்-ஜீன் இருக்கிறதா என்பதையும் பரிசோதனை செய்து வருகிறார்கள்.
அந்த எஸ்-ஜீன் இல்லாதபட்சத்தில் கிட்டத்தட்ட அந்த நபருக்கு உருமாறிய கொரோனா தொற்று இருக்கும் வாய்ப்பை விரைவாக கண்டறியலாம். ஆகவே உருமாறிய ஒமிக்ரான் தொற்றை கண்டறிய இந்த எஸ்-ஜீன் டிராப் அவுட் ஒரு முக்கியமான கருவியாக பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்