அச்சமூட்டும் கொரோனா.. குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? இந்தாங்க சில டிப்ஸ்!
பெரியவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டாலே உடல் வலி, காய்ச்சல், இருமல் தாங்க முடியாமல் இருக்கிறது. இந்த நிலையில் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் என்ன செய்வது என்ற அச்சம் பெற்றோர்களுக்கும் இருக்கும்.

கொரோனா வைரஸ் தொற்று அனைத்து வயதினரையும் தாக்க தொடங்கி உள்ளது. முதல் அலையின் போது பெரியவர்கள் மட்டும் பாதிக்க பட்ட நிலையில், இந்த இரண்டாவது அலையில் சில குழந்தைகளும் பாதிக்கப்பட்டனர். மூன்றாவது அலையில் அதிகஅளவில் குழைந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என வந்த தகவல்களின் அடிப்படையில், மருத்துவ வல்லுநர்கள் அப்படி குழந்தைகளை மட்டும் பாதிக்காது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் அனைவரையும் பாதிக்கும் என கூறினார்கள்.
என்ன தான் இருந்தாலும்,பெரியவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டாலே உடல் வலி, காய்ச்சல், இருமல் தாங்க முடியாமல் இருக்கிறது. இந்த நிலையில் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் என்ன செய்வது என்ற அச்சம் பெற்றோர்களுக்கும் இருக்கும். குழந்தைகளை தொற்றில் இருந்து பாதுகாக்க சில வழிமுறைகளை தெரிந்து கொள்வோம்.
- குழந்தைகளை முடிந்த வரை வெளியில் செல்லாமல், வீட்டில் இருப்பது நல்லது.குழுவாக மற்ற குழந்தைகளுடன் விளையாட அனுமதிக்க வேண்டாம். இது தொற்று பரவுவதற்கு வாய்ப்பாக அமைந்து விடும். அதனால் முடிந்த வரை மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதை அனுமதிக்க வேண்டாம்.
- குழந்தைகள் அனைத்து பொருள்களையும் தொட்டு கைகளை அப்டியே வாயில் வைத்து கொள்வார்கள். இதில் இருந்து தொற்று பரவும் அபாயம் உள்ளது. குழந்தைகளுக்கு அவ்வப்போது, ஏதேனும் பொருள்களை தொட்ட உடன் கைகளை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். கொரோனா வைரஸ், பொருள்களின் மீதும், இருப்பதால் எந்த பொருளை தொட்டாலும் உடனடியாக கைகளை கழுவ வேண்டும். இது தொற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும்.
- குழந்தைகள் வெளியில் செல்லும் போது சானிடைசேர் பயன்படுத்த பழக்க படுத்தவேண்டும். வீட்டில் இருக்கும் போது சோப்பு போட்டு கைகளை கழுவ சொல்ல வேண்டும்
- மாஸ்க் அணிவது கட்டாயப்படுத்த வேண்டும். குழந்தைகள் மாஸ்க் அணிந்து கொள்வது தொற்றில் இருந்து பாதுகாக்கும். மாஸ்க் அணியும் முறையை சொல்லி கொடுக்க வேண்டும்.
- சளி இருமல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஏதேனும் அறிகுறிகள் தெரிந்தால் அலட்சியம் காட்டாமல் மருத்துவரை அணுகி பரிசோதனைகள் செய்வதன் மூலம், நோயின் ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை எடுத்து கொள்ள உதவும்.
- ஊரடங்கு தான் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால், கொரோனா தொற்று இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. அதனால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்.
குழந்தைகளுக்கும், தடுப்பூசி போடுவது பற்றிய ஆராய்ச்சிக்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இது அக்டோபர் மற்றும்நவம்பர் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்க படுகிறது. தொற்று முழுமையாக குறையும் வரை அணைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

