தேனி , திண்டுக்கல் மாவட்டங்களில் இன்றைய கொரோனா நிலவரம்!
தேனி , திண்டுக்கல்லில் கடந்த வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்புகள் இல்லை என்பது ஆறுதல்.

தேனி , திண்டுக்கல்லில் கடந்த வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்புகள் ஏற்படுவது இல்லை என்பது ஆறுதல். இரு மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவல் தொற்று தொடர்ந்து குறைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த வாரத்தை பொருத்த வரையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும், நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 15 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32206 ஆக உயர்ந்துள்ளது. அதே போல் இன்று மட்டும் 14 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 31385 ஆக குறைந்துள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 622 ஆக இருக்கிறது. தற்போது 199 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் திண்டுக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் நோய் தொற்றால் உயிரிழப்புகள் இல்லாத நிலையே தொடர்கிறது.
அதே போல் தேனி மாவட்டத்தில் இன்று மட்டும் 12 நபர்களுக்கு நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42937 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் இன்று மட்டும் 18 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 42270 ஆக குறைந்துள்ளது. தற்போது வரையில் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 514 ஆக இருக்கிறது. இன்று 153 நபர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் தேனி மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேனி மாவட்டத்தில் இன்று உயிரிழப்புகள் ஏதும் இல்லை. கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் இரு மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவல் இந்த மாதம் இறுதி வரையில் தொடர்ந்து கட்டுக்குள் இருந்து வருகிறது. உயிரிழப்புகளும் கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் குறைந்தே உள்ளது என்பது ஆறுதல் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்தது. ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வந்தது. சில தினங்களாக தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 990 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,57,927 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,990 ஆக அதிகரித்துள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை தெரிந்துகொள்ள.
திண்டுக்கல் , தேனி மாவட்டங்களில், கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை..!
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )





















