திருவண்ணாமலை: புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று!
திருவண்ணாமலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்துகொண்டே வருகிறது இன்று ஒரே நாளில் 7 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று 1 நபர்கள் உயிரிழந்துள்ளனர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மாதம்வரை கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் அது கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 55 ஆயிரத்து 106 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 54 ஆயிரத்து 358 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 7 நபர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா தொற்றால் இன்று 1 நபர் உயிரிழப்பு . இதுவரையில் கொரோனா தொற்றால் இறந்தவர்கள் 669-ஆக உயர்ந்துள்ளது
மேலும் கொரோனா வைரஸ் தொற்றிக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் , தண்டராம்பட்டு , ஆரணி , செய்யார், வந்தவாசி , போளூர் , உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா வகைப்படுத்தும் மையம், போன்ற இடங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமாகி வீட்டிற்கு சென்றதால் மையங்கள் அனைத்தையும் காலிசெய்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் தற்போது 79 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக படிப்படியாக கொரோனா தொற்று குறைந்துகொண்டே வருகிறது.
மாவட்டத்தில் கொரோனா பரவல் மேலும் குறைந்து, பாதிப்பு வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது. இந்த புள்ளி விவரங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற இடங்களில் நேரடியாக கொடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் வெளியானவையாகும். வெளி மாவட்டங்களில் பரிசோதனை செய்து பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை இந்த புள்ளிவிவரத்தில் சேர்க்கப்படவில்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
திருவண்ணாமலையில் நாளை 36 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தடுப்பூசி முகாம்கள் அமைத்துள்ள இடங்கள் முத்து விநாயகர் தெரு. சித்தா மருத்துவமனை, புதுதெரு முஸ்லிம் பள்ளி, டவுன் ஹால் நகராட்சி பள்ளி சின்னக்கடை தெரு, குழந்தைகள் நல மையம் நகராட்சி ஆரம்பப்பள்ளி பேகோபுரம், தியாகி அண்ணாமலையார் அரசு மேல்நிலைப்பள்ளி வன்னியன் குளத் தெரு, சண்முக அரசு மேல்நிலைப்பள்ளி செங்கம் ரோடு, நகராட்சி நடுநிலைப்பள்ளி தாமரை நகர், நகராட்சி தொடக்கப்பள்ளி காக்கா நகர், நீயும் முன் நர்சரி பள்ளி சூர்யா நகர் இடங்களில் பொதுமக்கள் சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
அரசு சார்பில் நடவடிக்கைகளும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாக நடவடிக்கை மூலமாக நடவடிக்கை எடுத்தாலும், பொதுமக்கள் முழு மூச்சுடன் தற்காப்பை மேற்கொள்வதையும், முகக்கவசம் அணிவதையும், சானிடைசர் பயன்படுத்துவதையும், சமூக விலகலையும் கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )