மேலும் அறிய

திருவண்ணாமலை : புதிதாக இன்று 231 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலையில் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா தொற்றால் இன்று 231 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா தொற்றின் முதல் பாதிப்பு கடந்த 2020 மார்ச் மாதம் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த 21 மாதங்களில் முதல் அலை மற்றும் இரண்டாவது அலை உட்பட மொத்தம் 55,454 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தது.  இந்நிலையில், இரண்டாவது அலையின் தீவிரம் படிப்படியாக குறைந்திருந்த நிலையில், ஒமிக்ரான் தொற்று மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியது.

மேலும், கொரோனா தொற்று பரவல் கடந்த ஒரு வாரமாக தீவிரமடைந்திருக்கிறது. கடந்த 1ம் தேதி நிலவரப்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் தினசரி பாதிப்பு 6 பேர் என்ற அளவில் இருந்தது. ஆனால், நேற்று தொற்றினால் பாதித்தோரின் எண்ணிக்கை 73ஆக அதிகரித்திருந்தது. 

இதுவரை மாவட்டத்தில் 57 ஆயிரத்து 812 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 55 ஆயிரத்து  187பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 231 நபர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா தொற்றால் இன்று உயிரிழப்பு இல்லை .  இதுவரையில் கொரோனா தொற்றால் இறந்தவர்கள் 675-ஆக உயர்ந்துள்ளது.மேலும் கொரோனா வைரஸ் தொற்று க்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை பழைய மருத்துவமனை மற்றும் மருத்துவக்கலூரி மருத்துவமனை, செய்யார் மருத்துவமனையில் 
போன்ற இடங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் தற்போது 1950 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை : புதிதாக  இன்று 231 நபர்களுக்கு  கொரோனா தொற்று உறுதி

மாவட்டத்தில்‌ கொரோனா பரவல்‌ மேலும்‌ அதிகரித்தும் , பாதிப்பு வெகுவாகக்‌ அதிகாரிக்க வாய்ப்புள்ளது. இந்த புள்ளி விவரங்கள்‌ திருவண்ணாமலை மாவட்டத்தில்‌ உள்ள மருத்துவமனைகள்‌ ஆரம்ப சுகாதார நிலையங்கள்‌ போன்ற இடங்களில்‌ நேரடியாக கொடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள்‌ அடிப்படையில்‌ வெளியானவையாகும்‌. வெளி மாவட்டங்களில்‌ பரிசோதனை செய்து பாதிப்பு உறுதி செய்யப்பட்ட திருவண்ணாமலை ‌மாவட்டத்தைச்‌ சேர்ந்தவர்களின்‌ எண்ணிக்கை இந்த புள்ளிவிவரத்தில்‌ சேர்க்கப்படவில்லை என சுகாதாரத்‌துறையினர்‌ தெரிவித்தனர்‌.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி திருவண்ணாமலையில் ஏராளமான முன்கள பணியாளர்கள் செலுத்திக்கொண்டுவருகின்றனர். 

இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா தோற்று வேகமாக பரவி வரும் நிலையில், முன்கள பணியாளர்களுக்கு இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என, மத்திய அரசு அறிவித்த நிலையில், நாடு முழுவதும்  பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதற்கான முகாமினை சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, திருவண்ணாமலையில், பூஸ்டர் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.

அதன்படி,  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி பணி தொடங்கியது. அதனை ஆட்சியர் பா.முருகேஷ் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை : புதிதாக  இன்று 231 நபர்களுக்கு  கொரோனா தொற்று உறுதி

இதில் அரசு வழிகாட்டுதலின்படி கொரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதங்களுக்குப் பின்பு இந்த பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்றும் வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டது.
இன்று தொடங்கப்பட்ட கொரோனா பூஸ்டர் தடுப்பு ஊசியை அரசு ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் 105 நபர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இதில் மாவட்ட முழுவதும் முதல் தவணை, இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பு ஊசியை  1987 நபர்கள் செலுத்திக்கொண்டனர். 

மேலும் தடுப்பூசி செலுத்தும் அனைத்து மையங்களிலும் பூஸ்டர் தடுப்பு ஊசிக்கு தகுதியானவர்கள் செலுத்திக் கொள்ளலாம் என்றும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி எந்த நிறுவனம் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது அதே தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
"பணத்தை திருப்பி தரல" ஆபீஸ் பார்க்கிங்கில் வைத்து பெண் கொலை.. பட்டப்பகலில் சக ஊழியர் வெறிச்செயல்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
Embed widget