புதுச்சேரி: 177 பேருக்கு இன்று உறுதியானது கொரோனா தொற்று!
புதுச்சேரியில் மீண்டும் அதிகரிக்கிறது கொரோனா. இன்று ஒரே நாளில் 177 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 3 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் புதுச்சேரியில் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் இன்று புதிதாக 177 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 29 ஆயிரத்து 998 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 92 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 470 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 562 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 14 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 555 (98.12 சதவீதம்) ஆக உள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது குறிப்பிடத்தக்கது. குணமடைந்தோர் சதவீதம் 98.12. பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் சரியாக அணிந்து, தனிநபர் இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடித்து, கை சுத்தம் பேணி, கொரோனா தடுப்பூசியும் போட்டுக்கொண்டால் கொரோனாவில் இருந்து முற்றிலும் விடுபடலாம்” என்று சுகாதாரத்துறை சார்பில் குறிப்பிட்டுள்ளனர்.
புதுச்சேரியில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஒற்றை இலக்க எண்களில் பதிவாகி வந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, தற்போது மீண்டும் உயர்ந்து வருகிறது.
புதுச்சேரி அரசு அறிவித்துள்ள பல்வேறு புதிய கட்டுப்பாடுகள்:
அதன்படி 6-1-2022 முதல் புதுச்சேரியில் உள்ள மால்கள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், பார்கள், கலையரங்கம் உள்ளிட்ட இடங்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெ ளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வரும் வாகனங்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே பயணிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கோவில்களில் பக்தர்கள் இன்றி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி வழக்கம் போல் வகுப்புகளை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு சார்பில் நடவடிக்கைகளும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாக நடவடிக்கை மூலமாக நடவடிக்கை எடுத்தாலும், பொதுமக்கள் முழு மூச்சுடன் தற்காப்பை மேற்கொள்வதையும், முகக்கவசம் அணிவதையும், சானிடைசர் பயன்படுத்துவதையும், சமூக விலகலையும் கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )