Covid 19 New Rules: புத்தாண்டு முதல் 6 நாடுகளில் இருந்து வருவோருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை - மத்திய அமைச்சர்
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், 6 நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசாதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது
உலகில் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் பரவாமல் தடுக்கும் வகையில் 6 நாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசாதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய 6 நாடுகளில் இருந்து வருவோருக்கு வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
RT-PCR test has been made mandatory for flyers coming from China, Hong Kong, Japan, South Korea, Singapore and Thailand from 1st January 2023. They will have to upload their reports on the Air Suvidha portal before travel.
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) December 29, 2022
உருமாறிய வைரஸ்
கொரோனா தொற்றின் உருமாறிய வைரஸ் வகையான B.F.7 சீனா, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது.
சீனாவில் கொரோனா எண்ணிக்கை மீண்டும் உச்சத்தை எட்ட தொடங்கியுள்ளது. மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் நிரம்பி வழிவதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, ஜப்பான், தென் கொரியா, பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சீனாவில் மீண்டும் கொரோனா உச்சம் அடைவதற்கு நான்கு வகை கொரோனா வைரஸே காரணம். குறிப்பாக, BF.7 கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 15 சதவிகிதத்தினர் BF.7 வகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கண்டுபிடிப்பு:
சீனாவில் உச்சமடைந்து வரும் உருமாறிய BF.7 வகை கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவி வருகிறது. குஜராத்தில் 3 பேருக்கும் ஒடிசாவில் ஒருவரும் உருமாறிய BF.7 கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பல மாதங்களாக சீனாவில் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வந்தன. இதை தொடர்ந்து, பொருளாதார தாக்கத்தின் காரணமாகவும் மக்கள் போராட்டத்தின் விளைவாகவும் பூஜ்ய கொரோனா கட்டுப்பாடுகள் அங்கு திரும்பபெறப்பட்டது. இதன் காரணமாகதான், அங்கு கொரோனா அதிகரித்ததாக கூறப்படுகிறது.
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
Passengers from China, 5 other places will have to upload negative Covid report on air suvidha portal before travel: Health Minister
— Press Trust of India (@PTI_News) December 29, 2022
இந்நிலையில் சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய 6 நாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் ஆர்.டி.-பி.சி.ஆர்.பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
Also Read: கர்நாடக முதல்வர் சிலை மீது ரத்தத்தை தெளித்த விவசாயிகள்… கைது செய்த காவல்துறையினர்..
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )