Covid 19 Cases in India | மீண்டும் திகிலூட்டும் பெருந்தொற்று.. கடந்த 24 மணிநேரத்தில் 37,379 பேருக்கு கொரோனா..
கடந்த வாரத்திற்கு முந்தைய வாரத்தில், மரபணு வரிசைப்படுத்தப்பட்ட மொத்த வைரஸ் மாதிரிகளில், 14% மாதிரிகள் ஒமிக்ரான் மாறுபாடுகளுடன் இருந்தது
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,379 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. அதே சமயம், 11,007 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம், தற்போது சிகிச்சைப் பெற்று வருபவரளின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 1,71,830-ஆக அதிகரித்துள்ளது.
கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து, தற்போது 0.49 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.13 சதவீதமாகும்.
தினசரி பாதிப்பு விகிதம் 3.24% ஆகும். வாராந்திர பாதிப்பு விகிதம் 2.05% ஆகும். கடந்த 24 மணிநேரத்தில் 124 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 482017 ஆக அதிகரித்துள்ளது.
ஒமிக்ரான் பரவல்:
இதற்கிடையே, நாட்டில் ஒமிக்ரான் பரவல் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. டெல்லி, மஹாராஷ்ட்ரா, கேரளா, குஜராத், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 23 மாநிலங்களில் கொவிட்-19- ன் உருமாறிய ஒமிக்ரான் தொற்று 1892 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 766 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்/ அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில் 568 பேருக்கும், தில்லியில் 382 பேருக்கும், தமிழ்நாட்டில் 121 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்,100 பேர் ஒமிக்ரான் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
மூன்றாவது அலை குறியீடு:
டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியாவில் முதல் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தற்போது அதன் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த வராததிற்கு முந்தைய வாரத்தில், மரபணு வரிசைப்படுத்தப்பட்ட மொத்த வைரஸ் மாதிரிகளில், 14% மாதிரிகள் ஒமிக்ரான் மாறுபாடுகளுடன் இருந்தது. கடந்த வாரத்தில், 28 % மாதிரிகள் ஒமிக்ரான் மாறுபாடுகளுடன் உள்ளது. எனவே, இந்தியாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க, ஒமிக்ரான் மாறுபாடுகள் அதிகரித்து இருக்கிறது. டெல்டா மாறுபாடுகள் இந்தியாவில் இரண்டாவது அலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஒமிக்ரான் பரவல் மூன்றாவது அலையை ஏற்படுத்தி வருகின்றன. 28 % மாதிரிகள் அதிகரிப்பு என்பது இந்தியா மூன்றாவது அலைக்குள் நுழைகிறது என்பதை எடுத்துரைப்பதாக உள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்