கரூரில் இன்று புதிதாக 38 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு.. 15 பேர் உயிரிழப்பு
உப்பிடமங்கலம் பகுதியில் இன்று முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார்
கரூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 38 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் கரூர் மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 25,133 ஆக உயர்ந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் குணமடைந்தவர்கள் 15 பேர் . கரூர் மாவட்டத்தில் தற்போது சிகிச்சையில் 126 நபர்கள் உள்ளனர். கரூரில் சிகிச்சை பலனின்றி இன்று ஒருவர் உயிரிழப்பு.
தடுப்பூசி இருப்பு இல்லாத காரணமாக இன்று பொதுமக்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் செயல்படவில்லை. இன்று உப்பிடமங்கலம் பகுதியில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் முன் களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். இந்நிலையில் நாள்தோறும் பத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. கரூர் நகர பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தடுப்பூசி சிறப்பு மையமும் செயல்பட்டு வருகிறது.
*Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
நாமக்கல்லில் கொரோனா தொற்று பாதித்தவர்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக 109 நபர்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 54,973 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் இன்று சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பியவர் எண்ணிக்கை 43 பேர். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் 54,117 நபர்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் உயிரிழப்பு இல்லை. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 520 நபர்கள். தற்போது நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக 366 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் இன்று 10 க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்ற உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பஞ்சாயத்துகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் காய்ச்சல் முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று 13,990 நபர்கள் புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோர் 2,547 நபர்கள் ஆகும். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் இன்று 11 நபர்கள். தற்போது வரை மருத்துவமனைகளில் சிகிச்சையில் 62,767 நபர்கள் உள்ளனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )