சேலம் :191 பேருக்கு கொரோனா தொற்று; 6 பேர் உயிரிழப்பு!
சேலம் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் புதிதாக 191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர் .

சேலம் மாவட்டத்தில் ஒரேநாளில் புதிதாக 191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர் . மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1499-ஆக உள்ளது. மேலும் 187 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை சேலம் மாவட்டத்தில் 86828 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90502 ஆக உயர்வு. மாவட்டத்தில் 2175 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 10 சதவீத படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர். மூன்று மாதத்திற்கு பிறகு 200-க்கும் கீழ் கொரோனா நோய்த் தொற்று சென்றுள்ளது. கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கொரோனா கேர் சென்டர் ஒன்றன் பின் ஒன்றாக மூடப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் ஆறாம் நாளாக, இன்று தடுப்பூசி இருப்பு இல்லாத காரணத்தினால் மக்களுக்கு செலுத்தப்படவில்லை. நேற்று 7,400 தடுப்பூசிகள் சேலம் மாவட்ட மக்களுக்கு செலுத்தப்படும் என தவறான தகவல் பரவத் துவங்கியது , பின்பு 7,400 தடுப்பூசிகள் சேலம் மாவட்டத்தில் உள்ள முன் களப் பணியாளர்களுக்கு மட்டுமே வந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதுவரை சேலம் மாவட்டத்தில் 8,13,245 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக மக்கள் தினம்தோறும் அதிக அளவில் வந்து, ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே, சேலம் மாவட்டத்திற்கு கூடுதலாக தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொற்று எண்ணிக்கை குறைந்து வந்தாலும் சேலம் மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்தில் இன்றைய உயிரிழப்பு அதிகமாக உள்ளது

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி கொரோனா பதிவு : தர்மபுரி மாவட்டத்தில் இன்று புதிதாக 72 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 63 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் 803 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நோய் தொற்று அதிகரித்து இன்று ஒரேநாளில் 57 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நோயிலிருந்து குணமடைந்த 54 பேர் வீடு திரும்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 736 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 6 நாட்களில் 244-க்கு மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.





















