கரூர், நாமக்கல் மாவட்டங்களில் இன்றைய கொரோனா நிலவரம்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 55 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது
கரூர் மாவட்டத்தில், இன்று மட்டும் 17 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,766 - ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 19 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 22,239 -ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு ஏதும் இல்லாத நிலையில் கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 351 ஆக இருக்கிறது. இந்நிலையில் 176 நபர்கள் கொரோனா பாதிப்பால் கரூரில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்று கரூர் மாவட்டத்தில் தடுப்பூசி போடப்படவில்லை. 20க்கும் மேற்பட்ட இடத்தில் இன்று சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற்றது. நாளை தடுப்பூசி போடுவது குறித்து இதுவரை அதிகாரபூர்வ தகவல் இல்லை.
கரூர் மாவட்டத்தில் நாளை ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பூரத்தை முன்னிட்டு முக்கிய ஆலயங்கள் நடை சாத்தப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான ஆலயங்களில் நாளை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால் நாளைக்கு தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைய வாய்ப்பு அதிகம்.
கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏற்பாட்டில் "கொரோனாயில்லாத கரூர்" என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெற்றும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார். கடந்த ஒரு வார காலமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் சிறப்பான முறையில் செய்திருந்தது. இறுதியாக கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
அதேபோல் மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்திலிருந்து விழிப்புணர்வு வீடியோ வாகனத்தையும், கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் கொரோனா மூன்றாவது அறையை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருவது பாராட்டுக்குரியதாகும்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 55 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47590 ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 55 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 46547-ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்பு இல்லை. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 455 - ஆக இருக்கிறது. இந்நிலையில் 588 நபர்கள் கொரோனா பாதிப்பால் நாமக்கல் மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாமக்கல் மாவட்டத்தில் இன்று குறிப்பிட்ட சில இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது.
ஆகவே, மாவட்ட மக்கள் தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை இப்படி வெளியே செல்லும் பொழுது முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் தேவையில்லாத காரணத்திற்காக வீட்டைவிட்டு குழந்தைகளை எக்காரணம் கொண்டும் வெளியே அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாவட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )