சேலம் மாவட்டத்தில் புதிதாக 107 பேருக்கு தொற்று உறுதி; 3 பேர் உயிரிழப்பு!
சேலம் மாவட்டத்தில் புதிதாக 107 பேருக்கு தொற்று உறுதி; 3 பேர் உயிரிழப்பு.

சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் உயிரிழப்பு . மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1537 ஆக உள்ளது.
மேலும் 153 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினார். இதுவரை சேலம் மாவட்டத்தில் 89,652 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,737 ஆக உயர்வு.
மாவட்டத்தில் 1,548 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 10 சதவீதத்திற்கும் குறைவான படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் நேற்று 4912 பரிசோதிக்கப்பட்டதில் 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாம் நாளாக உயிரிழப்பு எதுவும் இல்லை. நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள 138 மையங்களிலும் நேற்று 24,500 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. சேலம் மாவட்டத்தில் நேற்று வரை 9 லட்சத்து 49 ஆயிரத்து 670 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் சமூக இடைவெளி கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்து மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்படி தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இருப்பு இல்லாத காரணத்தினால் இன்று சேலம் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தப்படவில்லை.

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி கொரோனா பதிவு :
தருமபுரி மாவட்டத்தில் இன்று புதிதாக 36 பேருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இன்று உயிரிழப்பு ஏதுமில்லை . மேலும் 60 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் 391 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை தருமபுரி மாவட்டத்தில் 25,266 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,889 ஆக உயர்வு. கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நோய் தொற்று அதிகரித்து இன்று ஒரே நாளில் 27 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழப்பு . நோயிலிருந்து குணமடைந்த 51 பேர் வீடு திரும்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 375 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40,427 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 41,123 ஆக உயர்வு.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 830 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,35,008 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,830 ஆக உள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 44ஆயிரத்து 870 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 36 ஆயிரத்து 880 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 130 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 133 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 130 ஆகக் குறைந்துள்ளது
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )





















