தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா - விழுப்புரம் அருகே மூதாட்டி உயிரிழப்பு
தமிழ்நாட்டில் மேலும் 401 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம்: முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி உயிரிழந்தார்.
தமிழ்நாட்டில் மேலும் 401 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று விழுப்புரத்தை சேர்ந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே வடமருதூர் கிராமத்தை சேர்ந்தவர் வயதான மூதாட்டி குப்பு (56), இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், இந்த நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் குப்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழ்நாட்டில் புதிதாக 401 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 198 பேர் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக உயிரிழப்பு பதிவாகி வருகிறது. மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் 2,301 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி சிங்கப்பூர், அரபு நாடு மற்றும் இந்தோனேசியாவிலிருந்து வந்த 3 வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,793 ஆர்டிபிசிஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு அதில் 401 மாதிரிகளில் தொற்று உறுதி செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 110 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 735 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தொற்று பரவும் சதவீதம் என்பது செங்கல்பட்டில் அதிகமாக காணப்படுகிறது. செங்கல்பட்டில் 11.3%, கன்னியாகுமரி – 11.3%, சென்னை – 9.6 %, திருவள்ளூர் – 11.2%, கடலூர் – 10.3%, திருவண்ணாமலை – 9.4% என பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )