Corona Rise | சென்னையை அச்சுறுத்தும் கொரோனா... கடந்த 10 நாளில் 5 மடங்காக அதிகரிப்பு! முழு விவரம்..
கடந்த 10 நாட்களில் மட்டும் தலைநகர் சென்னையில் மட்டும் 146 என பதிவாகியிருந்த தினசரி பாதிப்பு 776-ஆக அதிகரித்து 5 மடங்காக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் சூழலில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் நேற்று 1,02,029 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1594-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் 776 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 6 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 776 பேர் சிகிச்சை முடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
#TamilNadu | #COVID19 | 02 Jan 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) January 2, 2022
Today/Total - 1,594 / 27,51,128
Active Cases - 9,304
Discharged Today/Total - 624 / 27,05,034
Death Today/Total - 6 / 36,790
Samples Tested Today/Total - 1,02,237 / 5,76,50,087***
Test Positivity Rate (TPR) - 1.5%#TNCoronaUpdate #TN pic.twitter.com/vPxWjJYRf4
தமிழ்நாட்டில் இதுவரை 121 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டநிலையில் நேற்று புதிதாக யாருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்படவில்லை. கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் தினசரி கொரோனா தொற்றின் பாதிப்பு 100-ஐ நெருங்கி வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் 482 பாதிப்புகள் பதிவாகியுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் தினசரி பாதிப்பு 500 கீழ் தான் பதிவாகி இருந்த நிலையில், சென்னையில் மட்டும் தற்போது 100 மற்றும் அதற்கு அதிகமான பாதிப்புகள் பதிவாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#Chennai #COVID19 Day Wise Positive Cases
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) January 2, 2022
Chennai Total Cases - 5,64,438
02Jan: 776
01Jan: 682
31Dec: 589
30Dec: 397
29Dec: 294
28Dec: 194
27Dec: 172
26Dec: 171
25Dec: 165
24Dec: 146
23Dec: 145
22Dec: 136
21Dec: 132
20Dec: 126
19Dec: 129
18Dec: 125
May12: 7,564 (Highest)#TN
அதேபோல், கடந்த 10 நாட்களில் மட்டும் தலைநகர் சென்னையில் மட்டும் 146 என பதிவாகியிருந்த தினசரி பாதிப்பு 776-ஆக அதிகரித்து 5 மடங்காக உயர்ந்துள்ளது. ஏற்கனவே, சென்னை மாநகராட்சி பொதுமக்கள் அதிகமாக கூடும் இடமான கடற்கரைக்கு செல்ல தடை விதித்திருந்தனர். தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் வெளியிடப்பட்டது.
அதன்படி, சமுதாய கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும். மழலையர் விளையாட்டு பள்ளிகள் நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை. அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 10.01.2022 வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.
இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் நடத்த அனுமதிக்கப்படும். திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து அரங்கங்களிலும், அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50 சதவிகித பார்வையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.
அழகு நிலையங்கள் சலூன்களில் ஒரே நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் செயல்பட அனுமதிக்கப்படும் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரியக் கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என அரசு குறிப்பிடப்பிட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்