மேலும் அறிய
Advertisement
தூத்துக்குடி : மீண்டும் அதிகரித்த கொரோனா தொற்று : இரண்டாவது நாளாக 300-ஐ தாண்டிய எண்ணிக்கை..!
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால், கடந்த இரு தினங்களாக 300-க்கும் குறைவான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் குறைந்த நிலையில் நேற்றும் இன்றும் 300-ஐ தாண்டியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,767 ஆக அதிகரித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 562 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 4,552 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று ஒரே நாளில் 8 உயிரிழந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 337-ஆக அதிகரித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் கடந்த இரு தினங்களாக 300-க்கும் குறைவான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் குறைந்த நிலையில் நேற்றும் இன்றும் 300-ஐ தாண்டியது. இன்று மட்டும் 338 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் மாவட்டத்தில் தினமும் 4 முதல் 6 பேர் உயிரிழந்து வருகின்றனர். இன்று கொரோனா தொற்றால் 9 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 127 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்டு அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அதிகப்படியாக 38 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளது. தற்போதைய நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக படுக்கைகள் போதுமான அளவில் உள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான தனிப்படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆக்சிஜன் போதுமான அளவு கையிருப்பு இருப்பதாக தெரிவித்து உள்ள மாவட்ட நிர்வாகம், இன்று ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு 5.32 மெட்ரிக் டன், நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 9.22 மெட்ரிக் டன் அனுப்பப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, நேற்றும் இன்றும் இல்லாததால் தடுப்பூசி போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய உடல் நலம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் உடல் நலம் செய்திகளைத் (Tamil Health News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion