தேனியில் 11 பேருக்கும் , திண்டுக்கல்லில் 18 பேருக்கும் கொரோனா தொற்று!
தேனி , திண்டுக்கல் இரு மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தேனி , திண்டுக்கல் இரு மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த வாரத்தை பொருத்த வரையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது. கடந்த சில தினங்களாக நோய் தொற்றால் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏதும் இல்லாத நிலையில் இன்று திண்டுக்கல்லில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தேனியில் உயிரிழப்புகள் இல்லை என்பது ஆறுதல். திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 18 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32078ஆக உயர்ந்துள்ளது. அதே போல் இன்று மட்டும் 18நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 31224 ஆக குறைந்துள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 618ஆக இருக்கிறது. தற்போது 236பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் திண்டுக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் நோய் தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதே போல் தேனி மாவட்டத்தில் இன்று மட்டும் 11 நபர்களுக்கு நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42843-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் இன்று மட்டும் 26 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 42111ஆக குறைந்துள்ளது. தற்போது வரையில் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 513 ஆக இருக்கிறது. இன்று 219 நபர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் தேனி மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேனி மாவட்டத்தில் இன்று உயிரழப்புகள் ஏதும் இல்லை. திண்டுக்கல் மற்றும் தேனி இரு மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவலும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருவோர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் குறைந்து வருவது ஆறுதல் அளிக்கிறது.
நவீன முறையில் திருட்டுச்சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் அதனை தடுப்பதற்கு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுக்கும் விதமாக பல்வேறு பாதுகாப்பு முறைகளை கூறுகின்றனர்.
படிக்க: Cybercrime | ஆன்லைன் திருட்டு நடப்பது இப்படித்தான்... எச்சரிக்கும் போலீசார்!
பிரியாணி கடை நடத்தி வரும் நபர் தீவிரவாதத்துடன் தொடர்பில் உள்ளாரா
தேனி: தீவிரவாத தொடர்பா? - பிரியாணி கடைக்காரரிடம் தீவிர விசாரணை செய்யும் NIA!
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )