திண்டுக்கல் 11 பேர்: புதுக்கோட்டை 21 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!
தேனி , திண்டுக்கல் , புதுக்கோட்டை மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது, இம்மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பு ஏதும் இல்லை என்பது ஆறுதல்.

தென் மாவட்டங்களான திண்டுக்கல், தேனி , புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த மாதம் முதல் வாரத்திலிருந்தே கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு குறைந்திருந்தது. அதேபோல் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழப்புகளும் குறைந்திருந்தும் ஒரு சில நாட்களில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரிலக்க எண்ணாகவே இருந்தது தற்போது கொரோனா தொற்றுக்கு உயிரிழப்புகள் முற்றிலும் இல்லத நிலை ஆறுதல் அளிக்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 11 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32498-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 5 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 31771ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 631-ஆக இருக்கிறது. இந்நிலையில் 96 கொரோனா பாதிப்பால் திண்டுக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 3 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43212-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 6 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 42618-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 515 இருக்கிறது. இந்நிலையில் 79 கொரோனா பாதிப்பால் தேனியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 21 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29153-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 28 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 28498-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 390இருக்கிறது. இந்நிலையில் 265 கொரோனா பாதிப்பால் புதுக்கோட்டையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற
2 வயது தோற்றம் கொண்ட 25 வயது மாற்றுத்திறனாளி பெண் - உதவிக்கரம் நீட்ட அரசுக்கு கோரிக்கை...!
கொரோனா கட்டுப்பாடுகளை கடந்து மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பும் கொடைக்கானல்...!
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )





















