திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் 8 பேருக்கு கொரோனா
மாவட்ட ஆட்சியரின் உதவியாளர்கள் இருவர், கணினி உதவியாளர் ஒருவர், ஓட்டுநர், தூய்மை காவலர் உள்ளிட்ட 8 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் மாவட்ட ஆட்சியரின் உதவியாளர்கள் இருவர், கணினி உதவியாளர் ஒருவர், ஓட்டுநர், தூய்மை காவலர் உள்ளிட்ட 8 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனை மற்றும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
குத்தகை பாக்கி தராமல் டிமிக்கி - ஸ்டார் ஹோட்டலுக்கு சீல் வைத்து ஆட்சியர் அதிரடி
இந்த நிலையில் இவர்கள் அனைவருக்கும் லேசான அறிகுறிகள் இருப்பதால் தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் மாவட்ட ஆட்சியரின் உதவியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பணியாற்றி வருவதால் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் மட்டுமின்றி அரசு அலுவலர்களும் தினம் தோறும் மாவட்ட ஆட்சியரின் உதவியாளர்களை சந்தித்து வருவதால் கடந்த இரண்டு தினங்களில் யார் யார் சந்தித்தார்கள் அவர்கள் அனைவரையும் தொற்றுக்கான பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிதிலமடைந்த ராஜராஜசோழனின் தாத்தா கட்டிய அய்யனார் கோயில் - கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகள்
மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அவருடைய குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை என மருத்துவக்கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அவர்கள் வீடு மற்றும் முகாம் அலுவலகத்தில் பணியாற்றிய நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் அரசு அலுவலர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. தற்பொழுது கொரோனா தொற்றின் வேகம் மீண்டும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் மீண்டும் அச்சம் எழுந்துள்ளது.
திருவண்ணாமலையில் சாவிகளை ஒப்படைத்து ஊராட்சி தலைவர்கள் போராட்டம்
அதே நேரத்தில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அனைவரும் இரண்டு வகையான தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் மேலும் தனிமனித இடைவெளி கடைப்பிடித்து செயல்பட வேண்டும் திருவிழாக்காலங்களில் பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூட வேண்டாம் தனிமனித இடைவெளி கடைப்பிடித்து பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டும். வணிக நிறுவனங்களில் பணியாற்றும் நபர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் அதனை அந்தந்த வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் அதனை உறுதிப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )