மேலும் அறிய
Advertisement
மதுரை மருத்துவக்கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
’’மதுரை மருத்துவக்கல்லூரி மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தங்கும் விடுதிகளில் மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்’’
மதுரை மாவட்டத்தில், நேற்று மட்டும் 27 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரக்ளின் எண்ணிக்கை 74,335 ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 14 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 72,973 -ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழப்பு ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1163 இருக்கிறது. இந்நிலையில் 199 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மதுரை மருத்துவக்கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவிகள் தங்கும் விடுதி தனிமைப்படுத்தபட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை: மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் மாணவிகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாணவிகள் தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில் பேர் தொற்று பாதிக்கப்ப்பட மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.#Madurai #Corona #abpnadu #rajaji #hospital #medical
— Arunchinna (@iamarunchinna) September 21, 2021
இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
மதுரை மருத்துவக் கல்லூரியில் இளநிலை, முதுநிலை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயின்றுவருகின்றனர், கேரளா, ஒரிசா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் பயின்றவருகின்றனர். இந்நிலையில் இளநிலை இரண்டாம் ஆண்டு பயிலக்கூடிய 3 மாணவிகளுக்கும், பயிற்சி மருத்துவர் ஒருவர் என 4 பேருக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து 4 பேரும் மதுரை அரசு இராசாசி கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மன்னார் வளைகுடா பகுதியில் கரை ஒதுங்கும் கடல் புற்கள்: காரணம் என்ன..?
இந்நிலையில் 4பேரும் தங்கிய விடுதியை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளதோடு விடுதி மற்றும் கல்லூரியில் பாதிக்கப்பட்ட மாணவிகளுடன் தொடர்புடையை மாணாக்கர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யவுள்ளனர். கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கு பின்னரே மாணாக்கர்கள் அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்ட நிலையில் தடுப்பூசி செலுத்திய 4பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய உடல் நலம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் உடல் நலம் செய்திகளைத் (Tamil Health News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion