Tamil Nadu Coronavirus Highlights: தமிழ்நாட்டில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE

Background
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா 7 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 6 ஆயிரத்து 895 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,65,375 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 6,895 ஆக உள்ளது.
சென்னையில் 2 நாள் கோவாக்சின் தடுப்பூசி சிறப்பு முகாம்
சென்னை மாநகராட்சி பகுதியில் நாளை, நாளை மறுநாள் கோவாக்சின் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் முகாமில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
9 நாடுகளில் டெல்டா பிளஸ் தொற்று
இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், போர்ச்சுகல், ஜப்பான், சீனா, ரஷ்யா உள்ளிட்ட 9 நாடுகளில் டெல்டா பிளஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் 22 பேருக்கு இந்த தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசம், கேரளா, மகாராஷ்டிராவில் டெல்டா பிளஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது - மத்திய அரசு
கொரோனா 2ஆம் அலை ஓயவில்லை
இந்தியாவில் கொரோனா தொற்றுப்பரவும் விகிதம் குறைந்துள்ள போதிலும் கொரோனா இரண்டாவது அலை முடிவடைய சிறிது காலம் ஆகும். புதிய உருமாற்ற வைரஸ்கள் பரவி வருவதால் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
3ஆவது அலை - மாநில, மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
கொரோனா 3ஆவது அலையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி விநியோகத்தை துரிதப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

